Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RR vs MI: 100 சிக்சர்களை விளாசிய ஜெய்ஸ்வால்.. மும்பைனாலே அடிப்பேன்.. மிரட்டல் ரெக்கார்டை பாருங்க

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் தனது 100வது சிக்ஸரை எட்டி சாதனை படைத்துள்ளார். அஸ்ஸாமின் கௌஹாத்தியில் மழையால் தாமதமாகத் தொடங்கிய இப்போட்டியில், அவர் தனது 17வது அரை சதத்தையும் அடித்தார்.

மழையால் தாமதமாகத் தொடங்கிய இப்போட்டி 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஜெய்ஸ்வால்-வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ரன் சேர்த்தனர்.

அவர்கள் வெறும் 5 ஓவர்களில் 80 ரன்கள் குவித்தனர். ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில், 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட 39 ரன்கள் எடுத்திருந்த சூர்யவன்ஷி வெளியேறினார்.பின்னர் வந்த துருவ் ஜூரேல் 3 பந்துகளில் 2 ரன்களுக்கும், ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் 10 பந்துகளில் 20 ரன்களுக்கும் அல்லாஹ் கசன்ஃபரிடம் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஜெய்ஸ்வால் தனது அதிரடியை விடாமல் தொடர்ந்தார். அவர் விரைவாக அரை சதம் அடித்து அணியின் ரன் விகிதத்தைக் காத்தார்.ஹெட்மையர் ஜெய்ஸ்வாலுடன் களமிறங்கினார். ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் அணியை 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுக்க உதவினார். ஹெட்மையர் 7 பந்துகளில் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த இன்னிங்ஸ் மூலம், ஆரஞ்சு கேப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸின் சமீம் ரிஸ்வியையும் ஜெய்ஸ்வால் முந்தினார். ஜெய்ஸ்வால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடைசி 5 இன்னிங்சில் 328 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவருடைய சராசரி 109.33 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 197 என்ற அளவில் உள்ளது. இந்த 5 இன்னிங்சில் மும்பைக்கு எதிராக ஜெய்ஸ்வால் 21 சிக்சர்களும், 37 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார்.

Story first published: Tuesday, April 7, 2026, 23:54 [IST]
Other articles published on Apr 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+