Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு இன்னிங்ஸால் நடந்த மாற்றம்.. நாங்கள் வைபவ் சூர்யவன்ஷி வயதை பார்க்கவில்லை.. ரியான் பராக் உற்சாகம்!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. குறிப்பாக போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பவுலிங்கை வைபவ் சூர்யவன்ஷி எப்படி சமாளிப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி புதிய வரலாறு படைத்தார். வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் சர்வதேச கிரிக்கெட் உலகையே பிரமிக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணிக்கும் புதிய புத்துணர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேசுகையில், நாங்கள் யாரும் சூர்யவன்ஷியின் வயதில் கவனம் கொள்ளவில்லை.

RR vs MI We don t want to focus too much on Vaibhav Suryavanshi age says RR Captain Riyan Parag

ஏனென்றால் அவருக்கு சிறிய வயதிலேயே அதிக திறமை இருக்கிறது. 14 வயது சிறுவன் என்றாலும், அவரையும் மற்ற வீரர்களை போலவே நாங்கள் கருதுகிறோம். ஆனால் 14 வயதிலேயே ராஜஸ்தான் அணியின் ஒட்டுமொத்த சூழலையும் மாற்றி இருக்கிறார் என்று நிச்சயம் சொல்ல வேண்டும். முக்கியமான போட்டிகளில் இதுபோன்ற ஒரு ஸ்பார்க்கை தான் மிஸ் செய்து வந்தோம்.

சரியாக வைபவ் சூர்யவன்ஷி அணிக்குள் வந்து, ராஜஸ்தான் அணியின் சூழலை மாற்றியுள்ளார். எங்கள் அனைவரின் மனநிலையும் ஒன்றுதான். ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். புள்ளிப் பட்டியலை பார்த்தால், தேவையின்றி எங்கள் மீது அழுத்தம் அதிகரிக்கும். அதேபோல் சில சாத்தியமற்ற கற்பனை, எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்.

நாங்கள் அனைவரும் எங்களின் ஆட்டத்திலும், குழுவாக இணைந்து செய்ய வேண்டிய பணிகளிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். இங்கிருந்து பிளே ஆஃப் செல்கிறோமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரில் எந்த அணியும் மோசமான விளையாட வேண்டும் என்று நினைப்பதில்லை. மும்பை அணிக்கு தொடக்கத்தில் தேவையான வெற்றிகள் கிடைக்கவில்லை.

ஆனால் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றிருப்பது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்திருக்கும். அதேபோல் ஒவ்வொரு போட்டிக்கும், ஒவ்வொரு வீரர்கள் முன் நின்று விளையாடுகிறார்கள். அதுதான் மும்பை அணியின் வலிமை என்று கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தினால், ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் பாதை திறக்கும் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, May 1, 2025, 14:24 [IST]
Other articles published on May 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+