Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை மாதிரி பெங்களூர் பிளே-ஆஃப் போகலாம்.. ஆனா கண்டிப்பா ஒருத்தரை மாத்தியே ஆகணும்!!

ஜெய்ப்பூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த 2017, 2018 சீசன்களில் மோசமாக ஆடியது. பிளே-ஆஃப் சுற்றுக்கும் செல்லவில்லை.

2019 ஐபிஎல் தொடரில் அந்த மோசமான நிலையில் இருந்து, வெற்றிகளை குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு தொடருக்கு முன் இருந்தது. ஆனால், தொடர்ந்து தான் பங்கேற்ற முதல் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து இந்த ஆண்டும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

1
45770
பிளே-ஆஃப் கடினம்

பிளே-ஆஃப் கடினம்

இப்படி மோசமான துவக்கம் பெற்றுள்ள பெங்களூர் அணி இந்த ஆண்டு பிளே-ஆஃப் செல்வது கடினமே என்ற பேச்சு இப்போதே கிளம்பத் துவங்கியுள்ளது. பெங்களூர் அணிக்கு பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு உள்ளதா?

மும்பையின் உதாரணம்

மும்பையின் உதாரணம்

இந்த கேள்விக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியை உதாரணம் காட்ட முடியும். அந்த அணி 2015ஆம் ஆண்டில் தான் ஆடிய முதல் ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்து, பின்னர் போராடி பிளே-ஆஃப் சென்றது. பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, கோப்பையையும் கைப்பற்றியது.

பத்து போட்டிகள் உள்ளன

பத்து போட்டிகள் உள்ளன

இந்த வரலாறு மட்டுமே தற்போது பெங்களூர் அணி தன்னை தேற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அந்த அணிக்கு லீக் சுற்றில் இன்னும் பத்து போட்டிகள் மீதமுள்ளன. அதில் ஒரீரு போட்டிகள் தவிர மற்ற போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு கிடைக்கலாம்.

கேப்டனை மாற்றலாம்

கேப்டனை மாற்றலாம்

அதே சமயம், கோலியின் கேப்டன்சி தான் இந்த மோசமான நிலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இரண்டு தொடர்களில், சொதப்பி மூன்றாவது தொடரிலும் தோல்விகளை சந்தித்து ஒரு அணி தன் கேப்டனை மாற்றாமல் இருக்க எந்த காரணமும் சொல்ல முடியாது என்பதே சிலரின் வாதமாக உள்ளது.

தகுதியானவர் யார்?

தகுதியானவர் யார்?

எனவே, பெங்களூர் அணி ஒரு மாற்றத்துக்காக இரண்டு போட்டிகளுக்கு கேப்டனை மாற்றிப் பார்க்கலாம். கோலிக்கு அடுத்து அந்த அணியில் தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவர் ஏபி டி வில்லியர்ஸ் தான். அவருக்கு கேப்டன் பதவியை கொடுத்து, அவர் போக்கில் அணியை விட்டுப் பார்க்கலாம். ஆனால், இது நடைபெறாது என்றே தெரிகிறது.

Story first published: Wednesday, April 3, 2019, 14:52 [IST]
Other articles published on Apr 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+