For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி பண்ணிட்டீங்களே கோபால்.. கோலி, டி வில்லியர்ஸ் பலவீனத்தை வைத்து சாதித்த ராஜஸ்தான் வீரர்!!

ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரின் 14வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் ஸ்ரேயாஸ் கோபால், பெங்களூர் அணியின் முக்கிய விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

கோலி விக்கெட்

கோலி விக்கெட்

இந்தப் போட்டியில் பெங்களூர் அணியில் கோலி , பார்த்திவ் பட்டேல் துவக்கம் அளித்து ஆடினர். கோலி 23 ரன்கள் குவித்த நிலையில் ஸ்ரேயாஸ் கோபால் பந்தில் பௌல்டு அவுட் ஆனார். கோபால் வீசிய கூக்ளி பந்தை சரியாகக் கணிக்கத் தவறிய கோலி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

ஏபி டி வில்லியர்ஸ்

ஏபி டி வில்லியர்ஸ்

ஏபி டி வில்லியர்ஸ் 13 ரன்கள் அடித்து இருந்த போது ஸ்ரேயாஸ் கோபால் சுழலில் சிக்கி, அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இரண்டு ஓவர்கள் இடைவெளியில் இரண்டு பெரிய விக்கெட்களை வீழ்த்தினார் கோபால்.

ராஜஸ்தான் திட்டம்

ராஜஸ்தான் திட்டம்

ராஜஸ்தான் கேப்டன் ரஹானே சரியாக திட்டமிட்டே கோபாலை , கோலி - டி வில்லியர்ஸ் பேட்டிங் செய்த போது களமிறக்கினார் என கூறப்படுகிறது. கோலி, கூக்ளி பந்துகளிலும், டி வில்லியர்ஸ் ராங்-அன் பந்துகளிலும் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்து வருகின்றனர் என்பதை சரியாக கணித்து, அதன்படி கோபாலை களமிறக்கி ராஜஸ்தான் அணி தன் திட்டத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன்

ஆட்டநாயகன்

கோபால் பந்துவீச்சில் கோலி மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து ஆட்டமிழந்தார். அதே போல டி வில்லியர்ஸ் கோபால் பந்துவீச்சில் ஆறு பந்துகளை மட்டுமே சந்தித்து வெளியேறினார். மேலும், ஹெட்மையர் விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார் கோபால்.

Story first published: Wednesday, April 3, 2019, 11:11 [IST]
Other articles published on Apr 3, 2019
English summary
RR vs RCB : Shreyas Gopal controlled RCB with his bowling performance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+