RR vs SRH: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மாற்றம்.. இஷான் கிஷனுக்கு பதில் என்ட்ரி கொடுத்த பாட் கம்மின்ஸ்
ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் சுவாரஸ்யமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் மாற்றப்பட்டுள்ளார். இதுவரை சிறப்பாக அணியை வழிநடத்திய இஷான் கிஷனுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஓய்வில் இருந்த கம்மின்ஸ், போதிய பயிற்சிகளுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். டாஸ் வென்ற பிறகு பேசிய அவர், முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுக்கொடுத்து இஷான் கிஷன் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தினார் என பாராட்டினார். ஹைதராபாத் அணியில் தில்ஷன் மதுஷங்காவுக்கு பதிலாக கம்மின்ஸும், ஹர்ஷ் துபேவுக்கு பதிலாக பிரபுல் ஹிங்கேவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம், ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில், நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம்; கடந்த சீசன்களில் இலக்கை விரட்டுவதில் எங்களுக்கு சில சிரமங்கள் இருந்தன, எனவே முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சியே என்றார். மேலும் உள்ளூர் மைதானம் என்பதால் இங்குள்ள சூழல் தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும், பெரிய அளவில் பனிப்பொழிவு இருக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் ஆடுகளம் பாரம்பரியமாகவே பேட்டிங்கிற்கு அதிக சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆடுகளம் நன்றாக தயார் செய்யப்பட்டுள்ளதால் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் பக்கவாட்டில் 65 மீட்டரும், நேராக 76 மீட்டரும் இருப்பதால், பேட்ஸ்மேன்கள் எளிதாக பவுண்டரிகளை அடிக்க வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் 11: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல், ரியான் பராக் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மயர், டோனோவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, நாந்த்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா.
ராஜஸ்தான் ராயல்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரவி பிஷ்னோய், ரவி சிங், சந்தீப் சர்மா, சுபம் துபே
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் 11: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷிவாங் குமார், சாகிப் உசேன், பிரபுல் ஹிங்கே, ஈஷன் மலிங்கா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இம்பாக்ட் வீரர்கள்: ஸ்மரன் ரவிச்சந்திரன், லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், டிராவிஸ் ஹெட்


Click it and Unblock the Notifications