For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிளான் பண்ணி பண்ணலை.. ரூல்ஸ் இருக்கும் போது ஏன் நியாயம், தர்மம் பார்க்குறீங்க? அஸ்வின் தடாலடி!

Recommended Video

IPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சர்ச்சைக்குரிய முறையில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லர் அதிரடியாக ரன் குவித்து களத்தில் இருந்தப் போது, பந்து வீசும் முன் கிரீஸை விட்டு வெளியே நின்றார் என காரணம் கூறி அவுட் செய்தார் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின்.

இது அவுட்

இது அவுட்

கிரிக்கெட் விதிப்படி இது அவுட் தான் என்றாலும் கிரிக்கெட் வீரர்கள் நியாய, தர்மப்படி முதல் முறை எச்சரிக்கை விடுக்காமல் இப்படி ரன் அவுட் செய்வது கிடையாது. அஸ்வின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அஸ்வின் தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

உள்ளுணர்வு

உள்ளுணர்வு

"அந்த ரன் அவுட் உள்ளுணர்வு சார்ந்தது. நான் பந்து வீசவே இல்லை. அதற்குள் பட்லர் கிரீஸை விட்டு வெளியேறிவிட்டார். நான் கிரீஸில் பாதி தூரம் தான் வந்திருந்தேன். அதற்குள் அவர் வெளியேறிவிட்டார்" என குறிப்பிட்டார் அஸ்வின்.

திட்டமிடப்பட்டதா?

திட்டமிடப்பட்டதா?

இந்த ரன் அவுட்டை அஸ்வின் திட்டமிட்டு செய்தார் என கூறப்படும் நிலையில், இது திட்டமிடப்பட்டது அல்ல. இங்கே "ஸ்பிரிட் ஆஃப் தி கேம்" (விளையாட்டின் அடிப்படை தர்மம்" எங்கே வந்தது என தெரியவில்லை. இது விதிக்குள் இருக்கும் போது எதற்கு அதைப் பற்றி பேச வேண்டும் என்றார் அஸ்வின்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அஸ்வின் இப்படிக் கூறினாலும், ரன் அவுட் செய்வதை பார்த்த போது, அஸ்வின் திட்டமிட்டு சில வினாடிகள் நின்று பட்லர் கிரீஸை விட்டு வெளியேற காத்திருந்து பின் பெயில்சை தகர்த்ததை போலத்தான் இருந்தது.

தவறு

தவறு

அஸ்வின் செய்தது தவறு என பல கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இது ஒரு தவறான உதாரணம் என கூறி உள்ளனர். ராஜஸ்தான் அணியின் விளம்பரத் தூதுவர் மற்றும் ஆலோசகர் ஷேன் வார்னே பொங்கித் தீர்த்துள்ளார். இன்னும் என்ன நடக்கிறது என பார்ப்போம்.

Story first published: Tuesday, March 26, 2019, 11:05 [IST]
Other articles published on Mar 26, 2019
English summary
RRvKXIP IPL 2019 : Ashwin explained that he did not planned the run out
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+