Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன கொடுமை சார் இது.. அஸ்வின், ரஹானே நிலைமையை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு!!

Recommended Video

IPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ

ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடர் துவக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் ராஜஸ்தான் அணிக்கு ரஹானே கேப்டனாக தொடர்கிறார்.

அதே போல, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக தொடர்கிறார். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தாலும், இந்திய அணியில் இடம் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

நிலை

நிலை

அஸ்வின் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் இடம் கிடைக்காமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார். அதற்கும் கூட தற்போது வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

காயத்தால் போன வாய்ப்பு

காயத்தால் போன வாய்ப்பு

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அஸ்வின் காயமடைந்ததால், குல்தீப் யாதவ், ஜடேஜா அணியில் அவரது இடத்தை பிடித்துக் கொண்டனர். அவர்களுடன் போட்டி போட்டால் மட்டுமே டெஸ்ட் அணியில் கூட இடம் கிடைக்கும் என்ற நிலையில் இருக்கிறார் அஸ்வின்.

கெட்ட கனவு

கெட்ட கனவு

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஸ்வினுக்கு இடம் கிடைக்கும் என்பது கெட்ட கனவு மட்டுமே. குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா ஆகிய மூவரைத் தாண்டி அஸ்வின் உள்ளே நுழைவது கடினமே.

துணை கேப்டன் ரஹானே

துணை கேப்டன் ரஹானே

அதே போல ரஹானே, டெஸ்ட் அணியின் துணை கேப்டன். ஆனால், அவருக்கு ஒருநாள், டி20 அணியில் இடமில்லை. காரணம் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்பதே.

வருத்தம்

வருத்தம்

ஆனால், ரஹானே ராஜஸ்தான் ராயல்ஸ் எனும் டி20 அணியின் கேப்டனாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக செயல்பட்டு வருகிறார். அஸ்வின், ரஹானே நிலையை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. இவர்களில் ரஹானே ஐபிஎல் தொடரில் தான் நன்றாக ஆடினால் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார். வாழ்த்துக்கள் ரஹானே!!

Story first published: Monday, March 25, 2019, 22:58 [IST]
Other articles published on Mar 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+