Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்ச்சைக்குரிய முறையில் ராஜஸ்தானை வீழ்த்தி.. பஞ்சாப் அணிக்கு வெற்றி தேடித் தந்த கேப்டன் அஸ்வின்!!

Recommended Video

IPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ

ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கெயில், ராகுல் துவக்கம்

கெயில், ராகுல் துவக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெயில், ராகுல் துவக்கம் அளித்தனர். ராகுல் 4 ரன்களில் வெளியேறினார்.

கெயில் அதிரடி

கெயில் அதிரடி

அடுத்து கெயில், மாயங்க் அகர்வால் இணைந்து 56 ரன்கள் சேர்த்தனர். மாயங்க் 22 ரன்களில் வெளியேற, அடுத்து சர்ப்ராஸ் கான் களத்துக்கு வந்தார். அவர் 46 ரன்கள் சேர்த்தார். கெயில் 79 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் சேர்த்தது.

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 4 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து ஏமாற்றினார். ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறுதல் அளித்தார். ஸ்டோக்ஸ் 2, குல்கர்னி, கெளதம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ரஹானே - பட்லர் துவக்கம்

ரஹானே - பட்லர் துவக்கம்

அடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்தது. ரஹானே - பட்லர் இணைந்து 78 ரன்கள் சேர்த்தனர். பின் ரஹானே 27 ரன்களில் வெளியேறினார். அட்டகாசமாக ஆடி வந்த பட்லர் 69 ரன்கள் அடித்து இருந்த போது சர்ச்சைக்குரிய, முறையில் ஆட்டமிழந்தார்.

சர்ச்சை ரன் அவுட்

சர்ச்சை ரன் அவுட்

அஸ்வின் பந்து வீசிய போது, பேட்ஸ்மேனுக்கு எதிர்முனையில் இருந்த பட்லர், கிரீஸை விட்டு வெளியேறிய நேரத்தில், ரன் அவுட் செய்தார் அஸ்வின். இது பெரும் வாக்குவாதத்தை கிளப்பியது. அஸ்வின் வேண்டுமென்றே நின்று, பட்லர் கிரீஸை விட்டு வெளியேற விட்டுவிட்டு ரன் அவுட் செய்தார் என கூறப்பட்டது. எனினும், அம்பயர் முடிவால் பட்லர் வெளியேறினார்.

சீட்டுக்கட்டாய் சரிந்தனர்

சீட்டுக்கட்டாய் சரிந்தனர்

அடுத்து ஸ்மித் 20, சஞ்சு சாம்சன் 30, பென் ஸ்டோக்ஸ் 6, திரிபாதி 1, கௌதம் 3, ஆர்ச்சர் 2, ஜெயதேவ் 1 என சீட்டுக்கட்டாய் சரிந்தனர். 20 ஓவர்களில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்கள் இழந்து, போட்டியில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான்.

பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் அணிக்கு அதன் கேப்டன் அஸ்வின் சர்ச்சை ரன் அவுட் மூலம் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தி வெற்றி தேடிக் கொடுத்தார். பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளது. .

Story first published: Tuesday, March 26, 2019, 9:05 [IST]
Other articles published on Mar 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+