Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு அவமானம் தேவையா? வார்னர், கெயில், பண்ட்.. வரிசையில் நான்காவதாக பெங்களூர் அணி..!! என்னாது?

ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடர் அட்டகாசமாக துவங்கி உள்ளது. முதல் போட்டி தவிர்த்து மற்ற போட்டிகள் அனைத்தும் அதிக ரன்கள் குவித்த போட்டியாக அமைந்தது.

இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் வரை கணக்கில் எடுத்துக் கொண்டால் பெங்களூர் அணி நான்காம் இடம் பிடித்துள்ளது. எதில் என்று மட்டும் கேட்காதீர்கள். அது ஒரு சோகக் கதை!!

இதுவரை அதிக ரன்கள்

இதுவரை அதிக ரன்கள்

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் டேவிட் வார்னர் 85, கிறிஸ் கெயில் 79, ரிஷப் பண்ட் 78 ரன்கள் குவித்து முதல் மூன்று இடங்களை பிடிக்க, இந்த வரிசையில் ஒட்டு மொத்த பெங்களூர் அணியும் சேர்த்து எடுத்த ஸ்கோர் நான்காம் இடம் பிடித்துள்ளது.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

இப்படி ஒரு புள்ளிவிவர வரிசை இல்லையென்றாலும். கிரிக்கெட் ரசிகர்கள், பெங்களூர் அணியை இணையத்தில் இப்படி சொல்லித்தான் கிண்டலடித்து வருகிறார்கள். இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூர் அணி 70 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூர் அணி சரிவு

பெங்களூர் அணி சரிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாத பெங்களூர் அணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக வெளியேறினர். இதில் கோலி, டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களும் அடக்கம்.

கெயில் நீக்கம்

கெயில் நீக்கம்

2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் சரியாக ரன் குவிக்கவில்லை என்பதால் அவரை அணியில் இருந்து நீக்கியது பெங்களூர் அணி. இதன் பின்னணியில் கேப்டன் கோலி இருந்தார் என அப்போது கூறப்பட்டது.

அவமானம்

அவமானம்

ஆனால், 2018 ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் பஞ்சாப் அணிக்காக ஓரளவு சிறப்பாகவே ஆடினார். அதே போல இந்த ஆண்டும் தன் முதல் போட்டியிலேயே 79 ரன்கள் குவித்துள்ளார். அவர் ஒரு இன்னிங்க்ஸில் அடித்த ரன்களை ஒட்டுமொத்த பெங்களூர் அணியும் தாண்ட முடியாமல் 70 ரன்களில் ஆட்டமிழந்துள்ளது.

Story first published: Monday, March 25, 2019, 22:40 [IST]
Other articles published on Mar 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+