சோனமுத்தா போச்சா.. 8.4 கோடி கொடுத்து வருண் சக்கரவர்த்தியை வாங்குனீங்க.. இப்படி புட்டுகிச்சே!
ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல்-லுக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் தமிழ்நாட்டின் வருண் சக்ரவர்த்தி.
அவரை 8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ஏலம் எடுக்கப்பட்ட போது இந்த உள்ளூர் வீரருக்கு இவ்வளவு தொகையா என அனைவரும் வாயை பிளந்தனர். 8.4 கோடி என்பது மிக மிக அதிகம் என கூறப்பட்டது.

எதிர்பார்ப்பு
சரி, எப்படியோ அவசிய தேவைக்கு வருணை பெரிய தொகை கொடுத்து வாங்கிய பஞ்சாப் அணி அனைத்து போட்டியிலும் அவரை வைத்து எதிரணியை பதம் பார்க்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அங்கித் ராஜ்புட்
ஆனால், அதற்கு மாறாக இந்த ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டியில் வருண் சக்கரவர்த்தி பஞ்சாப் அணியில் இடம் பெறவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அங்கித் ராஜ்புட் என்ற வீரருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர்.

காயம்
ஏன் வருணுக்கு வாய்ப்பில்லை என கேட்ட போது, வருண் சக்கரவர்த்தி கடந்த சில மாதங்களாகவே காயத்துடன் இருப்பதாகவும், அதனால் சில போட்டிகளில் ஆட முடியாத சூழல் இருப்பதாகவும், பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் தெரிவித்தார்.

ஆடுகளம்
மேலும், அவருக்கு ஏற்ற ஆடுகளம் அமையும் போது அவரை நாங்கள் பயன்படுத்துவோம். அவரது பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் போது சரியான இடத்தில் நாங்கள் வெளிப்படுத்துவோம் என பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் கூறினார்.

சோனமுத்தா..
ஆக மொத்தத்தில், 8.4 கோடி கொடுத்து வாங்கிய வீரரால் அனைத்து போட்டிகளிலும் ஆட முடியாது என்பதே நிலை. ஒரு பக்கம் "சோனமுத்தா போச்சா" என பஞ்சாப் அணியை பார்த்து சிரிக்கத் தோன்றினாலும், தொடரின் இறுதிக் கட்டத்தில் வருண் தன் சுழல் திறமையைக் காட்டும் பட்சத்தில் பஞ்சாப் அணி பிளே-ஆஃப் செல்லவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications