Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்களை நினைச்சா அவமானமா இருக்கு.. இவங்கதான் நாட்டின் உண்மையான வைரஸ்.. கோபத்தில் கொந்தளித்த ரூபல்!

தாகா : வங்கதேச கிரிக்கெட் ரூபல் ஹுசைன் கொரோனா வைரஸ் அச்சத்தை பயன்படுத்தி அவர்கள் நாட்டில் நடக்கும் அநியாயத்தை கண்டு கொந்தளித்துள்ளார்.

Recommended Video

இவங்க தான் உண்மையான வைரஸ்... கொந்தளித்த கிரிக்கெட் வீரர்

வங்கதேச வியாபாரிகள் சிலர் நோய்த் தொற்று அபாயத்தையும், அதை ஒட்டி அரசு ஊரடங்கு கட்டுப்பாடு விதித்து வருவதையும் வைத்து விலைவாசியை உயர்த்தி வருவதாக குற்றம் சாட்டி உள்ளார் ரூபல் ஹுசைன்.

அவர்கள் மனிதமற்ற பேராசை பிடித்தவர்கள் என கடுமையாக சாடி உள்ளார்.

உலகத்திற்கு அச்சுறுத்தல்

உலகத்திற்கு அச்சுறுத்தல்

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கி இன்று சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது.

வேகமாக பரவுகிறது

வேகமாக பரவுகிறது

இந்தியாவில் 324 பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி ஆகி உள்ளது. வங்கதேசத்திலும் பரவி உள்ளது. அங்கே 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பொருளாதாரம் பாதிப்பு

பொருளாதாரம் பாதிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பிட்ட சில பொருட்களின் விலைவாசியும் எக்குத் தப்பாக உயர்ந்து வருகிறது.

விலை உயர்வு

விலை உயர்வு

குறிப்பாக, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் சானிடைசர் மற்றும் மருத்துவ முகக் கவசம் ஆகியவற்றில் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அரசுகள் எச்சரித்தும் சிலர் அதன் விலையை அதிகரித்து விற்கின்றனர்.

அநியாய விலை

அநியாய விலை

வங்கதேச நாட்டில் அதையும் தாண்டி மளிகைப் பொருட்களின் விலையையும் அநியாய விலைக்கு விற்பதை கண்டு பொங்கி உள்ளார் அன் அந்த நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரூபல் ஹுசைன். தந்து பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து அவர் விரிவாக பகிர்ந்துள்ளார்.

சீனா செயல்பாடு

சீனா செயல்பாடு

அவரது பதிவில், நாம் பேராசை பிடித்த மோசமான நாட்டில் இருக்கிறோம். சீனாவில் ஏற்பட்ட மோசமான பாதிப்பால் அவர்கள் நாட்டில் முகக் கவசம் விலை குறைக்கப்பட்டது. ஏனெனில், அவர்கள் மனிதர்கள் என சீனர்கள் குறித்து பாராட்டி இருந்தார்.

முகக் கவசம் விலை

முகக் கவசம் விலை

மேலும், வங்கதேசத்தில் 5 டாகா (வங்கதேச பணம்) முகக் கவசம் 50 டாகாவிற்கும், 20 டாகா மதிப்பு கொண்ட முகக் கவசம், 100 / 150 டாகாவிற்கும் விற்கப்படுகிறது. ஏனெனில், நாம் மனிதத்தன்மை அற்ற பேராசை பிடித்தவர்கள் என கூறி உள்ளார்.

வங்கதேச சுதந்திரம்

வங்கதேச சுதந்திரம்

மேலும், வங்கதேச நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த வீரக் குழந்தைகளை நினைவு கொண்டால், இப்போது நாம் அதே போல இல்லை. ஏன்? முகக் கவசம், நகைகள், மளிகை பொருட்கள் ஆகியவற்றின் விலை எறிக் கொண்டே போகிறது என குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான வைரஸ்

உண்மையான வைரஸ்

செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அந்த பேராசை பிடித்த வியாபாரிகளை நினைத்து அவமானமாக உள்ளது. அவர்கள் தான் இந்த நாட்டின் உண்மையான வைரஸ் எனவும் கடுமையாக கோபத்தில் கொந்தளித்துள்ளார்.

இந்தியா நிலை

இந்தியா நிலை

இந்தியாவில் மளிகை பொருட்களின் விலைவாசி இதுவரை சரியாகவே உள்ளது. சானிடைசர் மற்றும் முகக் கவசத்தின் விலை மட்டுமே அதிகமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. வங்கதேசத்தில் நடப்பது, நாளை நம் நாட்டிலும் நடக்கலாம்.

Story first published: Sunday, March 22, 2020, 19:52 [IST]
Other articles published on Mar 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+