Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி.என்.பி.எல்: மதுரையை வீழ்த்தி 2-வது வெற்றியைப் பெற்றது காஞ்சி வாரியர்ஸ்

நத்தம்: தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி காஞ்சி வாரியர்ஸ் அணி 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி (திண்டுக்கல்) நெல்லை ஐ.சி.எல். மைதானம் ஆகிய 3 இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Ruby Kanchi Warriors beats Madurai Super Giants

8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

மிகவும் பரப்பரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டித்தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் மதுரை அணியும் காஞ்சி வாரியர்ஸ் அணிகளும் மோதின.

நத்தத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ்அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை பறிகொடுத்து 135 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய காஞ்சி வாரியர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைக் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காஞ்சி வாரியர்ஸ் அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். அதேநேரம் மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.

Story first published: Saturday, September 10, 2016, 2:58 [IST]
Other articles published on Sep 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+