Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திருச்சியிடம் தோல்வி.... தூத்துக்குடிக்கு பிளே ஆப் வாய்ப்பு கிடைக்குமா!

Recommended Video

திருச்சியிடம் தோல்வியடைந்த தூத்துக்குடி- வீடியோ

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைய உள்ளன. இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் திருச்சி அணியிடம் தூத்துக்குடி தோல்வி அடைந்தது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பை சிக்கலாக்கி கொண்டது.

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் முதல் சுற்று லீக் ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. காரைக்குடி மற்றும் மதுரையைத் தவிர மற்ற அணிகள் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. மேலும் ஒரு ஆட்டங்களே இந்த அணிகளுக்கு உள்ளன.

Ruby trichy warriors won against jones tuti patriots in the tnpl

இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், ஜோன்ஸ்ட் டூடி பாட்ரியாட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராஜகோபால் 41, எஸ். அபிஷேக் 30, ஆனந்த் சுப்பிரமணியம் 23 ரன்கள் எடுத்தனர்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்

அடுத்து விளையாடிய திருச்சி அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பரத் சங்கர் 51, மணிபாரதி 26 ரன்கள் எடுத்தனர். பாபா இந்திரஜித் ஆட்டமிழக்காமல் 50, கணபதி சந்திரசேகர் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

புள்ளி பட்டியல்

இதையடுத்து இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் தலா 3 வெற்றிகளுடன் இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

காரைக்குடி, திண்டுக்கல், மதுரை தலா 8 புள்ளிகளுடனும், கோவை 6 புள்ளிகளுடனும் முதல் நான்கு இடத்தில் உள்ளன. முன்னாள் சாம்பியனான தூத்துக்குடி இந்த சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் காரைக்குடியை சந்திக்க உள்ளது. அதில் வென்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைப்பதற்கு சாத்தியம் உள்ளது.

Story first published: Thursday, August 2, 2018, 10:44 [IST]
Other articles published on Aug 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+