
இந்தியா இலங்கை ஒருநாள் தொடர்
இலங்கை அணி இந்தியாவுக்கு டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்துள்ளது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. முதல் போட்டி டிசம்பர் 10ம் தேதி ஹிமாச்சல பிரதேசத்தில் நடக்க உள்ளது.
இலங்கைக்குத்தான் வெற்றி
இந்த நிலையில் ஒருநாள் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக ரசல் அர்னால்ட் கமெண்டரி செய்யும் போது குறிப்பிட்டு இருந்தார். அதோடு நிற்காமல் டிவிட்டரில் அதை எழுதினார். ஆனால் டிவிட்டரில் தவறுதலாக ''டெஸ்ட் தொடர் 1-0 என்று முடிந்துவிட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன் நடந்தது போல ஒருநாள் தொடரும் 5-0 என்று முடியாது'' என்று கூறியிருந்தார். மொத்தம் மூன்று ஒருநாள் போட்டிகளே நடக்க இருக்கும் நிலையில் அவர் இப்படி குறிப்பிட்டு இருந்தார்.
லக்ஷ்மன் காமெடி
இதையடுத்து ரசல் அர்னால்ட் செய்த இந்த டிவிட்டை வைத்து விவிஎஸ் லக்ஷ்மன் அவரை கலாய்த்தார். அதில் ''ஆமாம் இலங்கை 5-0 என்றெல்லாம் தோற்காது, ஏனென்றால் மொத்தமாக மூன்று போட்டிதான் நடக்கும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கலாய்த்த ரசிகர்கள்
தற்போது ரசிகர்களும் லக்ஷ்மனுடன் சேர்ந்த ரசல் அர்னால்டை கலாய்த்து வருகின்றனர். அதில் இவர் ''போட்டிகளில் தொடர்ந்து தோற்றதால் உங்களுடைய ஏமாற்றம் புரிகிறது. ஹாஹாஹா. ஆனால் மொத்தமாக மூன்று போட்டிகள் மட்டுமே நடக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வின் கலாய்
இலங்கை தமிழரான இவர் சமயங்களில் தமிழில் பேசி காமெண்டரி செய்வார். அதே போல் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழில் இவர் பிட்ச் ரிப்போர்ட் கொடுத்தார். இந்த நிலையில் அவரின் தமிழ் காமெண்டரியை கலாய்த்து அஸ்வின் டிவிட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











