VIDEO: ஒரு ஓவர்தான்… இரட்டை சிக்சர்கள்.. அதுவும் ஒரே மாதிரி… இவரால மட்டும் எப்படி முடியுது?
கொல்கத்தா:டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 2 சிக்சர்களையும் ஒரே மாதிரியாக அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் காட்டடி மன்னன் ரசல்.
டெல்லி, கொல்கத்தா அணிகள் இடையேயோன லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி.
பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி. தொடக்க ஆட்டக்காரர் டென்லி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினர். எனினும் மற்றொரு வீரர் கில் நிதானமாக ஆடினார். ஒரு கட்டத்தில்65 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார்.

காட்டடி ரசல்
இதையடுத்து களமிறங்கினார் காட்டடி மன்னன் ரசல். சொந்த மைதானம் என்பதால் அரங்கம் அதிரும்படியாக அவர் செய்வார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

விளாசிய ரசல்
அவரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. வழக்கமான அதிரடியை ஆரம்பித்தார். அவர் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஒரே ஓவரில் 2 சிக்சர்கள்
அதிலும் 17வது ஓவரை அவர் எதிர்கொண்டு அடித்த சிக்சர்கள் தான் அந்த ஆட்டத்தின் ஹைலைட். சினிமாவில் இரட்டை வேடங்களில் வரும் கதாநாயகர்கள் போல... ஒரே ஸ்டைலில் இரண்டு சிக்சர்கள் .

ரசல் அவுட்
17.1, 17.3 ஓவரில் ரசல் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இந்த இரண்டு சிக்ஸர்களையும் ஒரே மாதிரி அடித்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிறிஸ் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

178 ரன்கள் குவிப்பு
இறுதியாக கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா, கிறிஸ் மோரிஸ், கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications