Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2016ல் பார்த்தேன்... முதல்ல காயத்தை விசாரிச்சாரு... அப்புறமாக வாழ்க்கையை விவரிச்சாரு!

துபாய் : சிஎஸ்கேவின் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.

அவர் தன்னுடைய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி குறித்து சில விஷயங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

தோனியுடன் இணைந்து விளையாடியதற்கு தான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான ருதுராஜ்

சிறப்பான ருதுராஜ்

இந்த சீசனில் பிளே-ஆப் சுற்றிற்கு செல்ல முடியாமல் நாடு திரும்பியுள்ளது சிஎஸ்கே அணி. ஆயினும் இந்த சீசனில் 12 புள்ளிகளுடன் கௌரவமாக வெளியேறியுள்ளது சிஎஸ்கே. இதற்கு அந்த அணியின் ருதுராஜ் கெய்க்வாடும் ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளார்.

கொரோனா சவால்

கொரோனா சவால்

ஆரம்பத்தில் கனவுகளுடன் யூஏஇக்கு பயணம் மேற்கொண்டார் இளம் வீரர் கெய்க்வாட். அவர் மட்டுமின்றி அந்த அணி வீரர்கள் அனைவருமே கோப்பை கனவுடன்தான் யூஏஇ வந்தனர். ஆனால் வந்தவுடன் கெய்க்வாடிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அணிக்குமே கொரோனா வைரஸ் சவால் விட்டது.

தொடர் அரைசதங்கள்

தொடர் அரைசதங்கள்

அதிலிருந்து மீண்டு சில வாரங்கள் கழித்து அணிக்கு திரும்பிய கெய்க்வாட் அதிரடி மன்னனாக சிஎஸ்கேவில் வலம்வந்தார். தொடர்ந்து அரைசதங்களை விளாசினார். அவர் தன்னுடைய திறமையை காண்பிக்கும் முன்னதாகவே பிளே-ஆப்பிலிருந்து வெளியேறியது சிஎஸ்கே.

அதிர்ஷ்டன் செய்திருக்க வேண்டும்

அதிர்ஷ்டன் செய்திருக்க வேண்டும்

இந்நிலையில் தான் கேப்டன் தோனியுடன் இணைந்து விளையாடியதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று கெய்க்வாட் தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து விளையாடியது கனவு நனவான தருணம் என்றும் கூறியுள்ளார். கடந்த 2016ல் அவரை முதல் முறையாக சந்தித்த போது, தான் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்ததை குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை குறித்து பேச்சு

ஜார்கண்ட் அணியின் வழிகாட்டியாக விளங்கிய தோனி, தன்னுடைய விரலில் ஏற்பட்ட காயம் குறித்து அக்கறையுடன் விசாரித்ததாகவும் தற்போது இந்த ஐபிஎல் சீசனில் முதல் 3 போட்டிகளில் தான் குறைந்த ரன்களை அடித்தபோது, தன்னிடம் வாழ்க்கை குறித்து பேசியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Story first published: Wednesday, November 4, 2020, 18:47 [IST]
Other articles published on Nov 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+