சுக்கு நூறாக உடைந்த நம்பிக்கை.. கொடுத்த வாய்ப்பு எல்லாம் போச்சு.. வருத்தத்தில் ரசிகர்கள்
கட்டாக்: தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் எமாற்றத்தை தந்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக சிஎஸ்கே அணியின் ருத்துராஜ் கெய்க்வாட்டும், மும்பை அணியின் இஷான் கிஷனும் களமிறங்கினர்.

மொத்தமே 62 ரன்கள்
இதுவரை ருத்துராஜ் கெய்வாட் 4 சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ளார். இதில் கெய்க்வாட் மொத்தமாகவே 62 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாகவே 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சூப்பர் ஸ்டார் போல் வலம் வந்தவர் ருத்துராஜ்.

மீண்டும் ஏமாற்றம்
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை அடித்தவர் போன்ற பெருமையை பெற்றார். இதனால் இந்திய அணியில் ருத்துராஜ் கெய்வாட் அதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ருத்துராஜ் கெய்வாட் தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.

1 ரன்னில் அவுட்
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க தொடரில் கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் இல்லாத நிலையில், தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கி, இன்றைய ஆட்டத்தில் 4 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட சிஎஸ்கே அணியில் முதல் சில போட்டிகளில் ருத்துராஜ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

சொதப்பிய பண்ட்
இதே போன்று இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஷப் பண்டும் இன்று ரசிகர்களை ஏமாற்றினார். 7 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 ரன்களில் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Click it and Unblock the Notifications