Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இருவருக்குமான பேருந்து கடந்து சென்று விட்டது.. இந்திய ஏ அணியில் கூட இடமில்லையா? ஆகாஷ் சோப்ரா பதில்

மும்பை: ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி பங்கேற்கும் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் நடந்த துலீப் கோப்பை தொடரின் ருதுராஜ் அபாரமாக விளையாடி 184 ரன்கள் குவித்தார்.

இதனால் இந்திய டெஸ்ட் அணியில் ருதுராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முதல் படியாக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கான இந்திய அணியில் ருதுராஜ் சேர்க்கப்படவில்லை.

Ruturaj Gaikwad

இதனால் பலரும் ருதுராஜ் விஷயத்தில் பிசிசிஐ தேர்வு குழுவினர் இரட்டை நிலைப்பாடை எடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, "துலீப் கோப்பையில் ருதுராஜ் 184 ரன்கள் குவித்தது உண்மைதான். ஆனால் கடந்த சில காலமாக இந்திய ஏ அணியில் அவர் சரியாக விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்."

"பார்டர் கவாஸ்கர் தொடரின் போது இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் ருதுராஜ் கேப்டனாக இருந்தார். இதைப் போன்று இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஏ அணி சுற்றுப்பயணத்திலும் ருதுராஜ் பிடித்திருந்தார். அதிலும் அவர் விளையாடவில்லை. எனவே அவருக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை."

"ருதுராஜ் சமீப காலமாக நன்றாக செயல்பட்டாலும், சக போட்டியாளர்கள் இன்னும் அவரை விட சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பெரிய ஸ்கோரை குவித்து வருகின்றனர். ஸ்ரேயாஸ் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால், ருதுராஜ் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறலாம்."

"ஆனால் இங்கு வெறும் எண்களை மட்டுமே யாரும் பார்ப்பதில்லை. இதற்காக வேண்டியவர்களை தேர்வு செய்கிறார்கள் என்று கூறுவது தவறானது ஆகும். கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற துலீப் கோப்பையில் ருதுராஜ் சராசரி 38 என்ற அளவில் இருந்தது. இதேபோன்று இராணி கோப்பையிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை."

"அதன் பிறகு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்திலும் ரஞ்சி கோப்பையிலும் அவர் சிறப்பாக விளையாடவில்லை. கடந்த இரண்டு ரஞ்சி சீசனில் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடிருக்கின்றார். இதேபோன்று துலீப் கோப்பையில் ரஜத் பட்டிதாரும் நன்றாக தான் விளையாடு இருக்கின்றார். அவருக்கும் இங்கிலாந்து தொடரில் பயிற்சி ஆட்டத்தில் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டது."

"ஆனால் அங்கு அவர் சரியாக செயல்படவில்லை. என்னை பொருத்தவரை இருவருக்குமான பேருந்து கடந்து சென்று விட்டது. தேர்வு குழுவினர் வேறு திசையை நோக்கி சென்று விட்டார்கள் என்று நினைக்கின்றேன். இதேபோன்று அக்யூப் நபி ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று எனக்கு குழப்பமாக இருக்கின்றது. நாம் நல்ல ஒரு வேகப்பந்துவீச்சாளரை தேடி வருகின்றோம். இந்த தருணத்தில் காஷ்மீரை சேர்ந்த அக்யூப் நபி 30 முதல் தர போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். துலீப் கோப்பையில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரை ஏன் தேர்வு செய்யவில்லை" என்றும் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

Story first published: Sunday, September 7, 2025, 20:55 [IST]
Other articles published on Sep 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+