For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுயநலமின்றி செயல்பட்ட ருதுராஜ்.. விக்கெட்டை தியாகம் செய்ய முன் வந்த பெரிய மனசு.. இப்படி செஞ்சிட்டாரே

டுபிளின் : அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி அபாரமாக செயல்பட்டது. அயர்லாந்து அணி 31 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Ruturaj Gaikwad and Yashasvi jaiswal caught mixed up in runout vs ireland in 1st t20

இந்த நிலையில் இறுதி கட்டத்தில் மெக்கார்த்தி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த நேரத்தில் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தது.

அதன் பிறகு 7வது ஓவரில் இரண்டு மற்றும் மூன்றாவது பந்துகளில் ஜெய்ஸ்வால் திலக் வர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது மழை குறுக்கிட்டது. எப்போதுமே டக் வொர்த் லூயிஸ் விதிப்படி விக்கெட்டுகள் கையில் இருக்கும் பட்சத்தில் ரன்கள் குறைவாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால் விக்கெட் போகப் போக நாம் எடுக்க வேண்டிய ரன்கள் அதிகமாக இருக்கும்.

இந்தியா தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் டக்வொர்த் விதிப்படி இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி நாம் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பவர் பிளேவில் ஜெய்ஸ்வாலும் ருதுராஜ் கெய்க்வாடும் விக்கெட்டுகள் விழாமல் அதிரடியாக விளையாடியது இந்திய அணி வெற்றிக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதில் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ருதுராஜ் பெரிய மனசால் ரன் அவுட் வாய்ப்பு பறிபோனது. ஜோஸ் லிட்டில் வீசிய பந்தை ஜெய்ஸ்வால் ஃபீல்டர் அருகே அடித்து விட்டு ரன் ஓடினார். ஆனால் ஃபில்டர் பந்தை எடுத்ததை கவனித்த ருதுராஜ் வேண்டாம் என கத்தினார். ஆனால் அதற்குள் ஜெய்ஷ்வான் எதிர் திசைக்கு வந்து விட்டார். எனினும் ஸ்டெம்பை அடிக்காமல் அயர்லாந்து வீரர்கள் பந்தை மிஸ் செய்தனர். ருதுராக் ரன் ஓடாமல் அதே இடத்தில் நின்று இருந்தால் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்திருக்க கூடும்.ஆனால் ரன் ஓட வாய்ப்பு இருக்கிறது, ஆனால் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று தெரிந்த ருதுராஜ் பந்து வீச்சாளர் முனையில் இருந்து விக்கெட் கீப்பர் இருக்கும் முனைக்கு ஓடினார்.

அப்போது அயர்லாந்து வீரர்கள் எறிந்தும் பந்து விக்கெட் கீப்பர் இடம் பிடிப்படுவதற்கு முன்பே ருதுராஜ் டைவ் அடித்து தனது விக்கெட்டை காப்பாற்றி கொண்டார். இதன் மூலம் இந்தியா இந்திய ரன் அவுட் ஆகும் வாய்ப்பு காப்பாற்றப்பட்டது. இரு வீரர்களும் ஒரே முனையில் இருந்தும் அயர்லாந்து வீரர்கள் ரன் அவுட் வாய்ப்பை வீணடித்தது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Story first published: Saturday, August 19, 2023, 6:52 [IST]
Other articles published on Aug 19, 2023
English summary
Ruturaj Gaikwad and Yashasvi jaiswal caught mixed up in runout vs ireland in 1st t20 சுயநலமின்றி செயல்பட்ட ருதுராஜ்.. விக்கெட்டை தியாகம் செய்ய முன் வந்த பெரிய மனசு.. இப்படி செஞ்சிட்டாரே
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+