Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி டிராபியை அதிரவிடும் ருதுராஜ்.. அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருது.. கம்பீர் வாய்ப்பு கொடுப்பாரா?

சண்டிகர்: ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், அடுத்தடுத்து 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வந்தாலும், இந்திய அணியில் அவருக்கு இதுநாள் வரை நிரந்தர இடம் கிடைக்கவில்லை. கடந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடிய போது, சுப்மன் கில் - ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்கம் கொடுத்து அபாரமாக விளையாடினர்.

Ruturaj Gaikwad comeback

அதன்பின் டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே ருதுராஜ் கெய்க்வாட் அறிமுகம் செய்யப்பட இருந்தார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடைசி நேரத்தில் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பின் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சதம் விளாசி அசத்தினார். அதன்பின் ருதுராஜ் கெய்க்வாட்க்கு இந்திய அணியின் கதவுகள் திறக்கப்படவே இல்லை. ஐபிஎல் தொடரிலும் காயம் காரணமாக விலக, பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் புச்சிபாபு தொடரில் களமிறங்கி சதம் விளாசினார். அதே ஃபார்மை துலீப் டிராபியிலும் வெளிப்படுத்த, ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்மில் இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து மகாராஷ்டிரா அணிக்காக ரஞ்சி டிராபி தொடரில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக ருதுராஜ் கெய்க்வாட் ஆடி வருகிறார். கேரளா அணிக்கு எதிரான முதல் ரஞ்சி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 91 ரன்களையும், 2வது இன்னிங்ஸில் கடைசி வரை களத்தில் இருந்து 55 ரன்களையும் விளாசினார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட்க்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

அதேபோல் சண்டிகர் அணிக்கு எதிரான 2வது ரஞ்சி போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் முதல் இன்னிங்ஸில் 116 ரன்களை விளாசியதோடு, 2வது இன்னிங்ஸில் 36 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தப் போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட்க்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது. 4 இன்னிங்ஸில் 2 அரைசதம், ஒரு சதம் மற்றும் 2 இன்னிங்ஸில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடி இருக்கிறார்.

ருதுராஜ் கெய்க்வாட்டின் இந்த ஃபார்ம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாழ்க்கையின் சிறந்த ஃபார்மில் ருதுராஜ் கெய்க்வாட் இருப்பதால், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் ருதுராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

Story first published: Tuesday, October 28, 2025, 17:53 [IST]
Other articles published on Oct 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+