Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா வைத்த செக்.. சிக்கிய சிஎஸ்கே வீரர்.. இனி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான்?

கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது.

தொடரை ஏற்கனவே இந்திய அணி வென்றதால் , ரோகித் சர்மா அணியில் 4 மாற்றத்தை மேற்கொண்டார்.

நீண்ட நாட்களாக வாய்ப்பே இல்லாமல் இருந்த சிஎஸ்கே வீரர் ருத்துராஜ்க்கு ரோகித் வாய்ப்பு வழங்கினார்.

இஷானுக்கு ஆபத்து

இஷானுக்கு ஆபத்து

ருத்துராஜ்க்கு வாய்ப்பே வழங்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சிக்க கூடாது என்பதற்காக இன்றைய போட்டியில் வாய்ப்பு தந்தாரா என்று தெரியவில்லை. இலங்கை தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளதால், அணியில் இஷான் கிஷன் இடத்துக்கு ஆபத்து வந்தது.

நெருக்கடி

நெருக்கடி

இதனால் அணியில் நீடிக்கப்போவது ருத்துராஜா, இஷான் கிஷனா என்ற நிலைக்கு இருவரும் வந்தனர். இதனையடுத்து இருவரையும் ஓப்பனிங் இறக்கிவிட்டு ரோகித் சர்மா பரிசோதித்தார். இதனால் அணியில் நீடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் ருத்துராஜ் மற்றும் இஷான் கிஷனுக்கு வழங்கப்பட்டது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ருத்துராஜ் கெய்க்வாட் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து ஒரு சூப்பர் பவுண்டரியை விளாசினார். வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்று அவர் தூக்கி அடித்த ஷாட் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. இதனால் 8 பந்தை எதிர்கொண்ட அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரோகித் செக்

ரோகித் செக்

தற்போது பார்த்தீங்களா நான் வாய்ப்பு கொடுத்தேன், அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று ரோகித் சர்மா கூறிவிட்டு, இனி அவரது செல்லப்பிள்ளைய்ன இஷான் கிஷனுக்கு வாய்ப்பு தரலாம். ஆனால், நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக ருத்துராஜ் காத்திருந்தார். இலங்கை தொடரிலும் அவருக்கு வாய்ப்பு தர வேண்டும். அப்போது தான் அது நியாயமாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, February 20, 2022, 20:01 [IST]
Other articles published on Feb 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+