Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க மனதை நொறுக்கிட்டீங்க ருத்துராஜ்..! நொந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்.. 31 வயது வீரருக்கு பிறந்த வழி

பெங்களூரு: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது டி20 போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் சொதப்பி ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ருத்துராஜ் கெய்வாட், 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்தவர்.

சிஎஸ்கேவின் செல்லப் பிள்ளையாக விளங்கும் ருத்துராஜ் கெய்வாட், விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து 4 முறை சதம் விளாசி அசத்தினார்.

அரிதான வாய்ப்பு

அரிதான வாய்ப்பு

இம்முறை கூட சிஎஸ்கே அணிக்காக சொதப்பினாலும், இறுதி கட்டங்களில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார். இந்த நிலையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் என இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் தென்னாப்பிரிக்க தொடரில் இல்லாத நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கும், இஷான் கிஷனுக்கும் தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கப்பட்டது.

வீணடித்த ருத்துராஜ்

வீணடித்த ருத்துராஜ்

இதில் இஷான் கிஷன் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, 76, 34, 54, 27, 15 என 5 போட்டிகளில் 2 முறை அரைசதம் அடித்து, நடப்பு தொடரில் அதிக (206) ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால், அவரை விட திறமையான வீரராக கருதப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் 5 போட்டிகளில் 23, 1, 57, 5, 10 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த 5 இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 96 ரன்கள் மட்டுமே ருத்துராஜ் சேர்த்துள்ளார்.

Recommended Video

Rahul Tripathi-க்கு Maiden Call-Up! 6 வருஷ காத்திருப்பு! | Aanee's Appeal | *Cricket
ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு

ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு

இதன் மூலம் தொடக்க வீரருக்கான மாற்று என்ற போட்டி வந்தால், அதில் இஷான் கிஷன் தான் முதலில் இருப்பார். இதனால், இனி அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டியில் ருத்துராஜ் கெய்வாட்க்கு பதிலாக ராகுல் திரிபாதிக்கு தான் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது ருத்துராஜின் இந்த ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் தான் கடுப்பாகி உள்ளனர்.

சொதப்பலுக்கு காரணம்

சொதப்பலுக்கு காரணம்

சிஎஸ்கே அணியின் எதிர்காலமாகவும், இந்திய அணியின் எதிர்காலமாகவும் ருத்துராஜை ரசிகர்கள் கருதினர்.ருத்துராஜ்க்கு 2022ஆம் ஆண்டு சரியாக அமையவில்லை. முதலில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை, பிறகு கொரோனா, மற்றும் காயம் என ருத்துராஜ் கெய்க்வாட் பல சவால்களை இந்த ஆண்டு சந்தித்துள்ளார். இதனால் தான் ருத்துராஜ் சொதப்புவதாகவும், மீண்டும் அவர் பழைய ஃபார்ம்க்கு திரும்புவார் என்று அவருடைய ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, June 19, 2022, 23:03 [IST]
Other articles published on Jun 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+