Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இனியும் இந்திய அணியில் இடம் கிடைக்கும்னு நினைக்காதீங்க” முக்கிய நேரத்தில் சொதப்பிய சிஎஸ்கே கேப்டன்

லண்டன்: தன்னை நிரூபிக்க அரிய வாய்ப்பு கிடைத்தும் அதில் சொதப்பி இருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்ற புகழ் ஒருபக்கம் இருந்தாலும் இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சொதப்பி இருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணி, இந்தியா 'ஏ' அணியுடன் ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் பயிற்சிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணி வீரர்களை தயார் செய்யும் வகையில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

Ruturaj Gaikwad Sarfaraz Khan Indian Cricket team Test Series

அதே சமயம், இந்தியா 'ஏ' அணியில் இடம்பெற்று இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான் போன்ற வீரர்களுக்கும் இது தங்களை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது. இந்தப் பயிற்சிப் போட்டியில் சர்பராஸ் கான் இந்திய அணிக்கு எதிராக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அதே சமயம், ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருக்கிறார்.

இதை அடுத்து, ருதுராஜுக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும், ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் அவரது இடத்தில் துவக்க வீரராக ருதுராஜை களமிறக்க வேண்டும் என கூறி வந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை பரிசாக அளித்திருக்கிறார் ருதுராஜ்.

2025 ஆம் ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மோசமான ஆண்டாகவே அமைந்தது. முதலில் இந்திய டி20 அணியில் காயம் காரணமாக தனது வாய்ப்பை இழந்தார். அடுத்து, 2025 ஐபிஎல் தொடரிலும் காயம் காரணமாக ஐந்து போட்டிகளுக்குப் பிறகு ஆடும் வாய்ப்பை இழந்தார். தோனிதான் மீதமுள்ள போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

இந்த நிலையில் தான், ருதுராஜ் கெய்க்வாட் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியா 'ஏ' அணியில் இடம் பிடித்திருந்தார். இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இந்தியா 'ஏ' அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்ததால், அதில் சிறப்பாக ஆடி தன்னை நிரூபித்து அவர் இந்திய அணியை நெருங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

முதலில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதில் சொதப்பி ஏமாற்றம் அளித்திருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்.

அதே சமயம், அதிரடியாக சதம் அடித்து வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சர்பராஸ் கான். அவர் 76 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து மிரட்டி இருந்தார். எனவே, இந்திய டெஸ்ட் அணியில் ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால், சர்பராஸ் கானை மாற்று வீரராக சேர்க்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, June 15, 2025, 13:01 [IST]
Other articles published on Jun 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+