Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை வைத்து கேம் ஆடிய சிஎஸ்கே.. ருதுராஜை பலி கொடுத்து விட்டார்கள்.. சரமாரியாக விளாசும் ரசிகர்கள்

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியை கேப்டனாக நியமித்து நேற்று அறிவிப்பு வெளியானது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் இருந்தும் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், அதை சில ரசிகர்கள் நம்ப தயாராக இல்லை.

அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டு தோனியை கேப்டனாக்க வேண்டி ருதுராஜ் கெய்க்வாட்டை பலி கொடுத்து விட்டதாக கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். காயம் என சொல்லப்படும் நிலையில் அதில் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.

Ruturaj Gaikwad Injury Controversy Fans Question CSK s Decision to Replace Him with Dhoni as Captain

முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. அந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் இரண்டு போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடிவிட்டார். அவருக்கு முழங்கை எலும்பு முறிவு இருக்கிறது என்றால் எப்படி அவரால் இரண்டு போட்டிகளில் விளையாட முடிந்தது என கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும், அவர் கேப்டன் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியானவுடன் சிஎஸ்கே வீரர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அந்த கால்பந்தை கையில் எடுத்து சுழற்றிக் கொண்டிருந்தார். அதை சுட்டிக்காட்டி, "முழங்கையில் எலும்பு முறிவு இருப்பவர் இப்படித்தான் சாதாரணமாக பந்தை எடுத்து சுற்றிக் கொண்டு இருப்பாரா? அப்படி என்றால் ருதுராஜுக்கு முழங்கையில் எந்தவிதமான வலியும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?" எனவும் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, சிஎஸ்கே அணியில் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது ருதுராஜ் கெய்க்வாட் தான். அப்படிப்பட்ட ஒரு வீரரை தோனியை கேப்டனாக்க வேண்டி வெளியே அனுப்பி விட்டார்கள் எனவும் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். அதாவது அவருக்கு காயமே இல்லை, ஆனால் கேப்டன் பதவியை தோனிக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக பொய்யான காரணத்தை கூறி வழி அனுப்பி விட்டார்கள் என ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதில் உண்மை இருக்க வாய்ப்பு இல்லை என்றாலும் இது போன்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. சிஎஸ்கே அணி அவரை அணியில் இருந்து நீக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. காயத்துடன் அவரை அணியில் தக்க வைத்து இருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம். அப்படி எனில் ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தில் அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Friday, April 11, 2025, 10:46 [IST]
Other articles published on Apr 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+