Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சி.எஸ்.கே. வீரருக்கு அடிச்சது லக்..!! இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக வீரராக வாய்ப்பு..!!

மும்பை: இந்திய அணியில் வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளம் வீரர்களில் முதன்மையாக இருப்பவர் ருத்துராஜ் கெய்க்வாட் .

ஐ.பி.எல், இந்தியா ஏ தொடர், விஜய் ஹசாரரே, சையது முஸ்தாக் அலி தொடர், ரஞ்சி தொடர் என ருத்துராஜ் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க தொடர் இந்திய அணியில் இடம் கிடைத்தும், களமிறங்க வாய்ப்பில்லை.

உற்சாக செய்தி

உற்சாக செய்தி

சரி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலாவது வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால், அதற்கும் கொரோனா வேட்டு வைத்துவிட்டது. இதனால் ஏமாற்றத்தில் இருந்த ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது. எந்த கிரிக்கெட் வீரருக்கும், தங்களது நாட்டிற்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதே கனவாக இருக்கும்.

இலங்கை டெஸ்ட்

இலங்கை டெஸ்ட்

ஆனால் இந்திய அணியில் தான் ஓபனிங் பேட்டிங்கிற்கே பெரிய பட்டாளமே இருக்கே பிறகு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என கேட்கலாம். அங்கு தான் ருத்துராஜ்க்கு குரு உச்சத்தில் இருக்கிறார். அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அறிமுக வீரர்

அறிமுக வீரர்

இந்த அணியில் சுப்மான் கில் காயம் காரணமாக இலங்கை டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மான் கில் இல்லை என்றால் என்ன ராகுல் , மாயங் அகர்வால் இருக்கிறார்களே என்று நீங்கள் நினைப்பதும் சரி தான். ஆனால், ருத்துராஜ்க்கு கிடைக்க போகும் வாய்ப்பு தொடக்க வீரராக அல்ல.

Recommended Video

CSKவுக்கு வருவாரா Dinesh Karthik? IPL Auctionல் Dhoniயின் முடிவு என்ன | OneIndia Tamil
நடுவரிசை

நடுவரிசை

இந்திய அணியின் அனுபவ வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் பார்மில் இல்லாததால், அவர்கள் ரஞ்சி போட்டியில் விளையாட உள்ளனர். இதனால் நடுவரிசையில் ருத்துராஜ்க்கு வாய்ப்பு வழங்க தேர்வுக்குழுவினர் முடிவு எடுத்துள்ளனர். இதனால் இலங்கை தொடரில் புத்தம் புதிய நடுவரிசை வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

Story first published: Friday, February 4, 2022, 16:43 [IST]
Other articles published on Feb 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+