Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஆண்டில் சிஎஸ்கே வீரருக்கு இத்தனை மரியாதையா? டெஸ்ட் அணியிலும் இடம்.. யார் இடத்துக்கு ஆபத்து?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தற்போது பல கௌரவ பொறுப்புகள் வந்து சேர்ந்திருக்கிறது. இந்திய அணிக்காக 6 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும், 23 சர்வதேச டி20 போட்டிகளிலும் ருதுராஜ் விளையாடியிருக்கிறார்.

எனினும் இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்கு முன்பே ருதுராஜ், ஐ பி எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி புகழின் உச்சிக்கு சென்று இருக்கிறார். சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியதால் தோனிக்கு பிறகு தற்போது புதிய கேப்டனாகவும் ருதுராஜ் செயல்படுகிறார்.

irani cup 2024 ruturaj gaikwad 2024

இதுவரை சிஎஸ்கே அணிக்காக 66 போட்டிகளில் விளையாடி 2,380 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதமும், 18 அரை சதமும் அடங்கும். சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ், சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இந்த நிலையில் ருதுராஜ்க்கு இந்திய அணியில் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை
என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
ருதுராஜ்க்கு 27 வயது ஆகியும் அவர் இன்னும் ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டிகள் கூட விளையாடவில்லை.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக ருதுராஜ், பல பொறுப்புகள் வந்திருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு சிஎஸ்கே அணியில் கேப்டன் என்ற பொறுப்பு ருதுராஜ்க்கு கிடைத்தது. இதேபோன்று மகாராஷ்டிரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ், அண்மையில் பிசிசிஐ நடத்திய துலீப் கோப்பை தொடரிலும் கேப்டனாக பொறுப்பேற்றார்.

தற்போது பாரம்பரியமிக்க இரானி கோப்பையில் இதர இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் செயல்படுகிறார். இந்த சூழலில் துலீப் கோப்பை தொடரில் இரண்டு அரை சதம் அடித்திருந்தால் தற்போது இராணி கோப்பை தொடரில் ருதுராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தன்னுடைய திறமையௌ வெளிப்படுத்தி பெரிய சதம் ஒன்றை அடித்தால் உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ருதுராஜ்க்கு சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் தெளிவாகியுள்ளது.

தற்போது கே எல் ராகுல் இந்திய டெஸ்ட் அணியின் நடு வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். அவர் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை என்றால் அவர் அதிரடியாக நீக்கப்பட்டு சர்ஃபாஸ்கான் மற்றும் ருதுராஜ்க்கு வாய்ப்பு வழங்க இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கண்டிப்பாக இடம் பெறுவார் என தெரிகிறது .அதற்கு முன்பாகவே வங்கதேசத்துக்கு எதிரான டி20 அணியிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் ருதுராஜ் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Tuesday, September 24, 2024, 20:00 [IST]
Other articles published on Sep 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+