
ஹர்திக் கூறிய உண்மை
இது குறித்து வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, ருத்துராஜுக்கு தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு போல் ஏற்பட்டுள்ளது, பெரிய ரிஸ்க் எடுத்து அவரை காயத்துடன் பேட்டிங் செய்ய அனுப்ப எங்களுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை.வீரரின் நலனே எனக்கு முக்கியம்.

தலைவலி இல்லை
அதனால் என்ன நடந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்பதால், அவரை பேட்டிங் செய்ய அனுப்பவில்லை. முடிவு எடுக்க எவ்வித சிரமம் ஏற்படவில்லை. வெறும் சுலபம் தான் நாங்கள் அனைவரும் ஒரு இடம் முன்னேறி பேட்டிங் செய்ய களத்துக்கு வந்தோம். அவ்வளவே.இதில் எங்களுக்கு எவ்வித தலைவலியும் ஏற்படவில்லை.

தொடரும் காயம்
ருத்துராஜை வைத்து எந்த சான்சும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை. நடப்பாண்டில் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு காலில் காயம் ஏற்படுவது இது 3வது முறை. தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் ருத்துராஜ் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. இதனால், பேட்டிங் செய்ய திரும்பினாலும், அவரால் பழைய முறைப்படி பேட்டிங் செய்ய முடியவில்லை.

ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு
தற்போது ருத்துராஜுக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய நிச்சயம் 3 வாரங்கள் ஆகலாம். இதனால் ருத்துராஜ் கெய்க்வாட், அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்த விலக அதிக வாய்ப்புள்ளது. ஒரு வேளை ருத்துராஜ் விலகினால், அவருக்கு பதில் பிளேயிங் லெவனில் ராகுல் திரிபாதி களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











