Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவர கூட்டிட்டு வாங்க..” 2வது டி20ல் ருதுராஜ் கெயிக்வாட் நீக்கம்.. மாற்று வீரர் யார் தெரியுமா??

டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இருந்து ருதுராஜ் கெயிக்வாட் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

2வது டி20ல் மாற்றம்

2வது டி20ல் மாற்றம்

தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 2வது டி20 போட்டி நாளை இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தான் ருதுராஜ் கெயிக்வாட் கழட்டிவிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதல் டி20-ல் அவரின் இடம் தீபக் ஹூடாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இதுகுறித்து விளக்கமளித்திருந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் ஓப்பனிங் ஆட முடியவில்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும் இஷான் கிஷானுக்கும் ஓப்பனிங்கில் சற்று சௌகரியம் இன்றி காணப்பட்டார்.

மாற்று வீரர் யார்

மாற்று வீரர் யார்

இந்நிலையில் 2வது போட்டியில் ருதுராஜுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவுள்ளார். முதல் போட்டியிலேயே சஞ்சு சாம்சன் ஏன் சேர்க்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது ருதுராஜின் காயமே சஞ்சு சாம்சனுக்கு வழி வகுத்துள்ளது.

சஞ்சுக்கு நெருக்கடி

சஞ்சுக்கு நெருக்கடி

இந்திய அணியில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஃபார்மில் இருந்தார். 17 போட்டிகளில் 458 ரன்களை குவித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 147 ஆகும். எனவே டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்துக்கொண்டு அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, June 27, 2022, 21:53 [IST]
Other articles published on Jun 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+