Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொதப்பினால் ஒத்துக்கனும்.. ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ருத்துராஜ்..சிஎஸ்கே தோல்வி குறித்து விளக்கம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி தழுவியது ஏன் என்பது குறித்து ருத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்,இம்முறை 9வது இடத்தை பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.

சென்னை அணியின் தோல்விக்கு பல காரணம் கூறலாம். ஆனால் சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி சொல்வாரே, சொதப்பினால் ஒத்துக்கனும் என்று.. அதை தான் ருத்துராஜிம் செய்துள்ளார்.

சிஎஸ்கே பயணம்

சிஎஸ்கே பயணம்

சிஎஸ்கேவில் பயணம் குறித்து பேசிய ருத்தராஜ், கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றது மறக்கவே முடியாதது. இம்முறை எங்கள் அணியின் தோல்விக்கு பல காரணம் கூறப்பட்டது. வீரர்களின் காயம், கேப்டன் மாற்றம், முக்கிய வீரர்கள் விலகல் என்று தோல்விக்கான காரணமாக இருக்கலாம். பலரும் எங்கள் அணிக்கு அதிர்ஷ்டம் இம்முறை இல்லை என்று கூறினர்.

சொதப்பியது உண்மை

சொதப்பியது உண்மை

ஆனால், நான் நேர்மையாக பதில் அளிக்க வேண்டும் என்றால் நடப்பு சீசனில் எங்கள் திறமைக்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதனை நாங்கள் செய்யவில்லை. இதனை எல்லாம் ஒப்பு கொண்டு முன்நோக்கி செல்வது தான் சிறந்தது.

சென்னையில் விளையாடுவோம்

சென்னையில் விளையாடுவோம்

அடுத்த வருசம் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்பிக்கை இருக்கிறது. வெற்றி பெற வேண்டும் உத்வேகத்துடன் பலமான அணியாக திரும்புவோம். அதற்கு ரசிகர்களாகிய உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். அடுத்த சீசனில் சென்னையில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் அன்பை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள்.

Recommended Video

KKR கிட்டயே முடியாதுனு சொல்லிட்டேன்.. Chris Gayle-யிடம் Sadhguru சொன்ன தகவல் #Cricket
அடுத்த கேப்டன் யார்?

அடுத்த கேப்டன் யார்?

உங்கள் ஆதரவு இருந்தால் இந்த கடினமான சூழலிருந்து நாங்கள் மீள்வோம் என்று ருத்துராஜ் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ருத்துராஜ் முதன்மையாக பேசுவதால் ஒரு வேலை அடுத்த கேப்டன் ருத்துராஜ் தானோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Thursday, May 19, 2022, 21:16 [IST]
Other articles published on May 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+