எனக்கு கேட்க தைரியம் இல்லை... தோனி ஓய்வு பெற்ற போது சிஎஸ்கே நடந்த சம்பவம்.. மனம் திறந்த ருத்ராஜ்!
மும்பை: எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தபோது, சிஎஸ்கே அணியில் நடந்த நிகழ்வை ருத்ராஜ் கெயிக்வாட் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத ஒரு நபர் தோனி. ஐசிசியின் 3 கோப்பைகளையும் வென்றுகொடுத்த ஒரே ஒரு கேப்டன் இவரே ஆகும்.
தோனி சரிவர விளையாடவில்லை, என்ற விமர்சனங்கள் அதிகரித்த சூழலில் திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

தோனியின் ஓய்வு
கடந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு பயிற்சி மேற்கொண்டிருந்த போது தோனி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போதுதான், சிஎஸ்கே அணியில் அறிமுகமாகி விளையாடினார் இளம் வீரர் ருத்ராஜ் கெயிக்வாட். கடந்த 2 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய வருகிறார். இந்நிலையில் தோனியின் ஓய்வின்போது சிஎஸ்கேவில் நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார்.

எனக்கு தைரியம் இல்லை
இதுகுறித்து பேட்டியின்போது பேசிய அவர், தோனி அறிவித்த ஆகஸ்ட் 15ம் தேதி நாங்கள் சென்னையில் சிஎஸ்கே அணியில் 10-12 பேர் தான் பயிற்சியில் இருந்திருப்போம். எனக்கு அப்போது தோனியின் முடிவு குறித்து எதுவும் தெரியாது. அவரிடம் கேட்கவும் எனக்கு தைரியம் இல்லை. ஏனென்றால், நான் அப்போது அறிமுக வீரர் தான்.

யாரும் கண்டுக்கொள்ளவில்லை
இரவு 7 மணி இருக்கும்போது நாங்கள் உணவு அருந்த சென்றோம். அப்போதுதான் தோனியின் அறிவிப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் எனக்கு தகவக் கிடைத்தது. உடனிருந்த யாருக்குமே அதுப்பற்றி தெரியாது. எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. அனைவரும் அமைதியாக இருந்தனர். அவர் இனி சர்வதேட போட்டியில் இல்லை என்பது நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதை உணர எனக்கு 2 நாட்கள் தேவைப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல்-ல் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தலைமையிலான சிஎஸ்கே அணி இந்தாண்டு புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications