Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியே அறிவுரை பெரும் அந்த நபர்... சிஎஸ்கேவுக்கு பல முறை உதவி... ருத்ராஜ் கூறிய சுவாரஸ்ய தகவல்!

சென்னை: சிஎஸ்கேவின் நலனுக்காக கேப்டன் தோனி பல முறை டூப்ளசிஸிடம் அறிவுரை கேட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மிகவும் சக்திவாய்ந்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கேப்டன் தோனி.

தோனியின் திட்டங்கள், சிந்தனைகள் முற்றிலும் சரியானதாக அமைந்திருக்கும். அவர் எடுக்கும் முடிவுகள் பல்வேறு சமயங்களில் ஜாம்பவான்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

தோனியின் சிறந்த கேப்டன்சியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 13 சீசன்களில் 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன்காரணமாக இளம் வீரர்கள் பலர் இன்றும் தோனியின் கீழ் விளையாட வேண்டும். அவரிடம் அறிவுரை பெற வேண்டும் என ஆசைப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தோனி பல சமயங்களில் டூப்ளசிஸுடம் அறிவுரை பெற்றிருப்பதாக இளம் வீரர் ருத்ராஜ் கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.

தோனி பெற்ற அறிவுரை

தோனி பெற்ற அறிவுரை

தென்னப்பிரிக்க வீரர் டூப்ளசிஸும் - தோனியும் 2011ம் ஆண்டு முதல் சிஎஸ்கேவுக்காக இணைந்து விளையாடி வருகின்றனர். இவர்களின் நட்பு குறித்து தெரிவித்துள்ள ருத்ராஜ், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பெரும் மரியாதை வைத்துள்ளனர். போட்டிகளின் போதும், போட்டிகள் முடிந்த பிறகும் டூப்ளசிஸ், தோனிடம் சென்று அறிவுரை கூறுவார். இவ்வளவு அனுபவம் பெற்ற பிறகும் அவர்கள் அறிவுரை பெற்று வருகின்றனர்.

2 மணி நேர ஆலோசனை

2 மணி நேர ஆலோசனை

அவர்களின் பேச்சுவார்த்தை 5 - 10 நிமிடங்கள் இருக்காது. கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள் கூட இருவரும் தனியாக சென்று போட்டிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார்கள். போட்டியின் போது தோனியே பல முறை டூப்ளசிஸுன் ஆலோசனையை பெற அவரிடம் செல்வார் எனக்கூறியுள்ளார்.

டூப்ளசிஸ்

டூப்ளசிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு மிகச்சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளது. இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. இந்த சீசனில் டூப்ளசிஸ் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார். இதுவரை 7 போட்டிகள் விளையாடியுள்ள அவர் 320 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 4, 2021, 21:05 [IST]
Other articles published on Jun 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+