Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தரமான சதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட்.. நம்பர் 7 பேட்ஸ்மேனாக ஆடி மிரளவிட்ட சிஎஸ்கே கேப்டன்!

புனே: ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி சம்பவம் செய்துள்ளார். நம்பர் 7 பேட்ஸ்மேனாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், 172 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 101 ரன்களை விளாசி நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய ருதுராஜ் கெய்வாட் கடைசி போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். அதேபோல் முதல் 2 போட்டிகளிலும் டாப் ஆர்டரில் ஆடிய வீரருக்கு சிறந்த கம்பெனியை கொடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட்டின் பொறுப்பான ஆட்டம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Ruturaj Gaikwad

இதன் மூலமாக உலகக்கோப்பை தொடருக்கான திட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் இருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு மண்ணில் ருதுராஜ் கெய்க்வாட் திறமையை வெளிப்படுத்தினால், எளிதாக உலகக்கோப்பை அணியில் இடத்தை உறுதி செய்யலாம். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில் ருதுராஜ் கெய்க்வாட் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடி வருகிறார். ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜார்க்கண்ட் அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன்பின் மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய திக்விஜய் பாட்டில் மற்றும் அன்கிட் பாவ்னே ஆகியோர் அபார சதம் விளாசினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 172 பந்துகளில் 1 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 101 ரன்களை குவித்தார். இதன் மூலமாக மகாராஷ்டிரா அணி 527 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ரஞ்சி டிராபி போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் நல்ல ஃபார்மில் ஆடி வருவது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதே ஃபார்மை நியூசிலாந்து மண்ணிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கியுள்ளனர். இன்னும் ஒரு சில ரஞ்சி போட்டிகளில் ருதுராஜ் நல்ல இன்னிங்ஸை ஆடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, October 20, 2026, 17:42 [IST]
Other articles published on Oct 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+