Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது அவங்க 2 பேரும் ஐம்பது ரன் அடிச்சாச்சா? அப்ப ராகுல் தான் இனி இந்திய அணி கேப்டன்

மொஹாலி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில், கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தனர். முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Ruturaj Gaikwad, Suryakumar shines under KL Rahul captaincy, stunning India vs Australia cricket memes

இந்தப் போட்டி குறித்த மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அவற்றில் சில இங்கே -

நேற்றைய போட்டி ஒளிபரப்பு சுமாராக இருந்ததை அடுத்து ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் தமிழ் சேனலை கலாய்த்து இருக்கிறது இந்த மீம்.

கே எல் ராகுல் கேப்டன்சியில் இதுவரை சொதப்பி வந்த ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் சூர்யகுமார் யாதவ் நன்றாக ஆடி உள்ளனர். எனவே, அவரை நிரந்தரமாக கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியை முதல் ஒருநாள் போட்டியில் வீழ்த்திய இந்திய அணி மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. ஆனால், பத்து ஆண்டுகளாக எந்த ஐசிசி கோப்பையையும் இந்தியா வெல்லவில்லை என கூறி இருக்கிறார்.

கே எல் ராகுல் இந்திய அணியின் கேப்டன் ஆனால், அவரின் தலைமையில் இந்திய வீரர்கள் தங்களின் மைல்கல் சாதனைகளை அதிகமாக செய்வதாக புள்ளிவிவரத்துடன் வெளியாகி உள்ளது. நேற்றைய போட்டியில் அவர் தான் இந்திய அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் ஏழு ஓவர்களை ஹர்பஜன் சிங் முனையிலிருந்து வீசினார். அப்போது 39 ரன்களை கொடுத்தார். ஆனால், தன் கடைசி 3 ஓவர்களை யுவராஜ் சிங் முனையிலிருந்து வீசினார். அப்போது வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 1 விக்கெட்டும் வீழ்த்தினார். ஹர்பஜன் ஸின் முனையில் அஸ்வின் பயந்ததாகவும், யுவராஜ் சிங் முனையில் அவர் பயப்படாமல் இருந்ததாவும் குறிக்கிறது இந்த மீம்.

இந்திய அணியில் ஷமிக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனால், நேற்று தனக்கு கிடைத்த வாய்ப்பில் அவர் அதிரடியாக 5 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய வைத்தார்.

Story first published: Saturday, September 23, 2023, 11:54 [IST]
Other articles published on Sep 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+