Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே- க்கு மேலும் ஒரு ஆல்ரவுண்டர் கிடைச்சாச்சி.. ருதுராஜ் இனி வெறும் பேட்ஸ்மேன் மட்டுமல்ல

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது என்பது தற்போது மிகப்பெரிய ஒரு காரியமாக மாறிவிட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிய கோப்பை டி20 அணியில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூட 15 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் போட்டி எவ்வாறு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இதே போன்று சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ், இந்திய அணியில் இடம் கிடைப்பதில்லை. டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தன்னுடைய திறமையை ருதுராஜ் பலமுறை நிரூபித்து இருந்தாலும், அவருக்கு அணியில் இடம் கிடைப்பதில்லை.

Ruturaj Gaikwad

இதனால் ருதுராஜ், தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கின்றார். அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் இனி வெறும் பேட்ஸ்மேன் ஆக இருந்தால் மட்டும் போதாது. பந்து நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவை ருதுராஜ் எடுத்திருக்கின்றார். இதனால் பவுலராக புதிய அவதாரம் ஒன்றை ருதுராஜ் எடுத்து இருக்கின்றார்.

அதன்படி ரஞ்சி கோப்பை தொடருக்கு முன்பாக தமிழ்நாட்டில் நடைபெறும் புஜ்ஜு பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்கியுள்ளார். காயத்திலிருந்து திரும்பி வந்த ருதுராஜ் பேட்டிங்கில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் திடீரென்று பந்துவீச்சில் ருதுராஜ் களமிறங்கினார்.

என்னடா ருதுராஜ் பந்து வீசுகிறார் என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஓடி வந்து அழகாக சுழற் பந்து வீச்சை ருதுராஜ் வீசினார். இதில் முதல் பந்தில் ஒரு ரன்னும், இரண்டாவது பந்தில் சிக்ஸரும் விட்டுக் கொடுத்தார். ஆனால் மூன்றாவது பதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அபாரமாக ஒரு ரிட்டன் கேட்ச் கொடுத்து அசத்தினார்.

இதனை பாராட்டியுள்ள ரசிகர்கள் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ருதுராஜிடம் தனது ஓய்வு நேரத்தில் புதிய திறமையை வளர்த்துக் கொண்டிருப்பதாக பாராட்டியுள்ளனர். இதன் மூலம் இந்திய அணியில் விரைவில் ருதுராஜ்க்கு இடம் கிடைக்கும் என்றும் சிஎஸ்கே அணி புதிய ஆல்ரவுண்டர் ஒருவர் கிடைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, August 19, 2025, 20:59 [IST]
Other articles published on Aug 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+