“மூன்றே போட்டி தான்.. எல்லாம் போச்சு” தவானின் ஆசையை சுக்குநூறாக உடைத்த 2 பேர்..கவலையில் ரசிகர்கள்!
மும்பை: தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் சீனியர் வீரரின் இடத்தை பறிக்க 2 இளம் வீரர்களுக்கு வாய்ப்புள்ளது.
இந்திய அணி இம்மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
முழு நேர கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி செல்லும் முதல் சுற்றுப்பயணம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தென்னாப்பிரிக்க டூர்
இந்த சுற்றுப்பயணத்திற்காக டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி மட்டும் அறிவிக்கப்படவில்லை. ஒருநாள் போட்டி தொடர் ஜனவரி 19ம் தேதி தான் தொடங்குவதால் பிசிசிஐ மௌனம் காத்து வருகிறது. குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பை தொடரை குறிவைத்தான் தாமதம் ஏற்படுகிறது. அதில் சிறப்பாக விளையாடும் வீரர்களையும் இந்திய அணிக்கு எடுக்கவுள்ளது.

சீனியர் வீரர்
இந்திய ஒருநாள் அணியில் சீனியர் வீரர் ஷிகர் தவான் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். இதே போல இலங்கை சுற்றுப்பயணத்தின் போதும் அதிரடியான ஆட்டத்தை காட்டியிருந்தார். எனவே அவரை அணிக்குள் மீண்டும் காணலாம் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இளம் வீரர்கள் அசத்தல்
நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அடுத்து சதமடித்து அசத்தி வருகின்றனர். ஐபிஎல்-ல் ஓப்பனராக ஆடும் வெங்கடேஷ் ஐயர், விஜய் ஹசாரேவில் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். இதுவரை நடந்த போட்டிகளில் 112 (84), 71 (49), 151 ( 113) என அதிரடி காட்டியுள்ளார். இதே போல பவுலிங்கிலும் முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை இவர் நிரப்புவார் என பிசிசிஐ திட்டமிட்டு தென்னாப்பிரிக்க டூரில் இணைக்கவுள்ளது.

கெயிக்வாட் அதிரடி
இதே போல இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் ஹாட்ரிக் சதங்களை விளாசி தனக்கு இடம் கொடுத்தே ஆக வேண்டும் என்பது போன்ற நிலையில் உள்ளார். மகாராஷ்டிரா கேப்டனாக விளையாடி வரும் கெயிக்வாட் 136, 154, 124 என ரன்கள் குவித்துள்ளார். இதனால் இவரை ஓப்பனிங்கிற்கு ரிசர்வ் வீரராக அழைத்துச்செல்ல நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Recommended Video

தவானின் ஃபார்ம்
ஆனால் ஷிகர் தவான் விஜய் ஹசாரேவில் படு மோசமாக சொதப்பி வருகிறார். இதுவரை அவர் ஆடியுள்ள போட்டிகளில் 0, 12, 14, 18 போன்ற ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். எனவே அவருக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம் தான். அப்படி கிடைத்தாலும், இந்திய அணியில் ஏற்கனவே ரோகித் - கே.எல். ராகுல் என முதன்மை தேர்வுகள் உள்ளனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டால் தான் ஷிகருக்கு வாய்ப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications