Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ருதுராஜ் vs கில்.. வார்த்தை மாறிய கம்பீர்.. மீண்டும் அதே தவறு செய்த பிசிசிஐ

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக கில் தான் வரப்போகிறார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கில் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று டி20 கிரிக்கெட்டிலும் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இளம் நட்சத்திர வீரரான கில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். கில்லை விட ருதுராஜ் டி20 போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சராசரி, அதிக ஸ்ட்ரைக் ரேட், அதிக அரை சதம் என அனைத்திலும் பெஸ்டாக இருக்கிறது.

ind vs sl india squad cricket vs Ruturaj

ருதுராஜ் டி20 தரவரிசை பட்டியலிலும் எட்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இவ்வளவு திறமை இருந்தும் ருதுராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களுடைய கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தான் பயிற்சியாளராக வருவதற்கு முன் கம்பீர் பேசியதற்கும் பயிற்சியாளர் ஆன பிறகு கம்பீர் செய்த நடவடிக்கைக்கும் பெரிய ஒரு மாற்றம் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பயிற்சியாளர் பதவிக்கு வருவதற்கு முன் இனி எந்த ஒரு வீரரும் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்க்கப்பட மாட்டார்கள். டி20 ஒருநாள் போட்டிக்கு ஒரு அணி, டெஸ்ட் போட்டிக்கு தனி அணி என்று வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கம்பீர் கூறி இருந்தார். இதன் மூலம் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது கில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்பட்டதும் அல்லாமல் துணை கேப்டன் ஆகவும் இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் நம்பர் மூன்றாவது இடத்தில் விளையாடும்போது டி20 மோசமாக விளையாடி வந்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பல விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.

ஒரே வீரர் மூன்று போட்டிகளில் விளையாடுவதால் ருதுராஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு சுத்தமாக கிடைப்பதில்லை என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதனால் ருதுராஜ் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Saturday, July 20, 2024, 12:21 [IST]
Other articles published on Jul 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+