Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஊரெல்லாம் கொரோனா.. ஆனால் இந்த சைட்பாட்டம் செஞ்ச வேலையைப் பாருங்களேன்!

லண்டன்: இங்கிலாந்து வீரர் ரியான் சைட்பாட்டம் 2வது திருமணம் செய்திருக்கிறார். இங்கிலாந்தில் சமூக கூடுதல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ரியான் சைட்பாட்டம் திருமணம் நடந்துள்ளது.

கொரோனாவைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கூட்டமாக கூடுவதை முதலில் தடை செய்துள்ளனர். அப்படியும் மக்கள் விடுவதாக இல்லை.

இந்த நிலையில் விளையாட்டுத்துறையிலும் கூட ஏகப்பட்ட கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் போட்டித் தொடர்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால் வீரர்கள், வீராங்கனைகள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

2வது திருமணம் செய்த சைட்பாட்டம்

2வது திருமணம் செய்த சைட்பாட்டம்

இந்த நிலையில் நம்ம சைட்பாட்டம் ஒரு சூப்பர் வேலையைச் செய்துள்ளார். அதாவது கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இது அவருக்கு 2வது கல்யாணம் ஆகும். இவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஆவார். தற்போது இங்கிலாந்தில் திருமணங்கள், சமூக கூடுதல்கள், நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.

சமூக கூடுதலுக்கு தடை

சமூக கூடுதலுக்கு தடை

ஆனால் இந்த தடை உத்தரவு வருவதற்கு முன்பாகவே ரியான் சைட்பாட்டமின் திருமணம் நடந்து முடிந்து விட்டது. இதனால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார் சைட்பாட்டம். கிட்டத்தட்ட ஜஸ்ட் எஸ்கேப் போலத்தான் (என்ன புண்ணியம்.. அரசிடமிருந்து தப்பி திருமண வலையில் சிக்கிக் கொண்டாரே!). அரசு தடை விதிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் சைட்பாட்டம் திருணம் நடந்தது.

2017ம் ஆண்டுடன் சைட்பாட்டம் ஓய்வு

2017ம் ஆண்டுடன் சைட்பாட்டம் ஓய்வு

2017ம் ஆண்டிலேயே ரியான் சைட்பாட்டம் ஓய்வு பெற்று விட்டார். இவர் 22 டெஸ்ட் போட்டிகள், 25 ஒரு நாள் போட்டிகள், 18 டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு கேப்டனாக இருந்துள்ளார். 131 விக்கெட்களையும் மொத்தமாக வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணி 2010ம் ஆண்டு தனது முதல் டி20 உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியிலும் இடம் பெற்றிருந்தார். டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

2வது மனைவியின் பெயர் மேடி

2வது மனைவியின் பெயர் மேடி

ரியான் சைட்பாட்டம் திருமணம் செய்துள்ள பெண்ணின் பெயர் மேடி காஸ்டிகன். இவர்களது திருமணம் நடந்த இடம் ஆலிஸ் இன் ஒன்டர்லேன்ட்டில் வருவது போல அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மொத்த நாளும் திருமண ஜோடியும், அவர்களது நண்பர்கள், உறவினர்கள் என கோலாகலமாக காணப்பட்டது. எங்களது குடும்பத்தினரைப் போலவே நாங்களும் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம் என்று பெரிதாக புன்னகைத்தபடி கூறுகிறார் மேடி.

Story first published: Monday, March 23, 2020, 18:24 [IST]
Other articles published on Mar 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+