Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மலிங்காவின் நோபாலை கவனிக்க தவறியவர்… உலக கோப்பை நடுவராக தேர்வு… என்ன நடக்கப் போகுதோ தெரியல

துபாய்: மலிங்காவின் நோ பாலை கவனிக்க தவறிய நடுவர் ரவி, ஐசிசி உலக கோப்பை தொடருக்கான நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஜோதிடர்கள் அந்த அணி தான்... இல்லை... இல்லை இந்த அணி தான் என்று கணித்து சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவை எதிர்கொள்ள தயார் ஆகி விட்டனர். போட்டியை நேரில் செல்வதற்கான ஏற்பாடுகளிலும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் இறங்கி விட்டனர்.

நடுவர்கள் பட்டியல்

நடுவர்கள் பட்டியல்

இந் நிலையில் உலக கோப்பைக்கான நடுவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவின் ரவி இடம் பெற்றுள்ளார். மொத்தம் 16 நடுவர்கள் மற்றும் 6 போட்டி நடுவர்கள் என 48 போட்டிகளுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது.

நோ பால் நடுவர்

நோ பால் நடுவர்

நடுவர்களில் இந்தியாவின் எஸ். ரவி என்கிற ஒரே ஒரு நடுவர் மட்டும் உள்ளார். அவர் வேறு யாருமல்ல... ஐபிஎல் தொடரில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதிய போட்டியில் மலிங்கா வீசிய நோ பாலை கவனிக்க தவறியவர்.

டேவிட் பூன் நடுவர்

டேவிட் பூன் நடுவர்

இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் போட்டியில் 3உலக வின்னர்கள் நடுவர்களாக இருக்க போகின்றனர். டேவிட் பூன் போட்டி நடுவராகவும், குமார தர்மசேனா கள நடுவராகவும், ரெய்பெல் 3வது நடுவராகவும் இருக்க உள்ளனர்.

போட்டி நடுவர்கள்

போட்டி நடுவர்கள்

கிறிஸ் போர்டு, ஜெப் கிரோவ், ஆண்டி பைகிராப்ட், ரஞ்சன் மதுகாலே , ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகியோர் போட்டி நடுவர்கள். அலீம் தார், எராஸ்மஸ், கிறிஸ் கப்பானே, இயான் கூல்டு, ரிச்சர்டு லிங்வெர்த், கெட்டில்போர்க், நைஜல் லாங்க், ருசிரா பல்லியாகுர்கே, ராட் டக்கர், மைக்கே ல் காப், பாவுல் வில்சன், ரவி ஆகியோரும் நடுவர்களாக இருக்க போகின்றனர்.

சீனியர் நடுவர்

சீனியர் நடுவர்

இவர்களில் மதுகாலே சீனியர் நடுவர். 6வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறார். போர்டு மற்றும் கிரோவுக்கு இது 4வது உலக கோப்பையாகும்.

4வது தொடர்

4வது தொடர்

அதே போல நடுவர் அலீம் தாருக்கு இது 4வது உலக கோப்பை தொடராகும். இயான் கூல்டு இந்த உலக கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

Story first published: Friday, April 26, 2019, 23:34 [IST]
Other articles published on Apr 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+