டர்பன் : தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் SA 20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சகோதர அணியாக கருதப்படும் சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டி மழையால் ரத்தான நிலையில் எஞ்சிய மூன்று போட்டிகளிலும் ஜே எஸ் கே அணி படுதோல்வியை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் மொத்தம் ஒன்பது லீக் ஆட்டம் விளையாடுகிறது.

இதில் நான்கு போட்டிகளில் ஜே எஸ் கே அணி விளையாடுகின்ற நிலையில் எஞ்சிய ஐந்து போட்டிகள் இருக்கிறது.இதில் அனைத்துமே ஜே எஸ் கே அணி வெற்றி பெற்றால் மட்டுமே முதல் இரண்டு இடத்திற்கு செல்ல முடியும். இல்லையெனில் குறைந்தது 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் ஜே எஸ் கே அணி இருக்கிறது.
தற்போது புள்ளி பட்டியலில் ராயல் அணி மூன்று போட்டிகளுமே வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர் கேப் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி ரத்து என 6 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
எம்ஐ கேப்டன் அணி விளையாடும் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி இரண்டு தோல்வி என ஐந்து புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் பிரிட்டோரியா கேப்பிட்டல் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி இரண்டு தோல்வி என 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ஜோனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி மூன்று தோல்வி ஒரு போட்டி ரத்து என இரண்டு புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திலும் இருக்கிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.