Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA 20 போட்டிகள் 6 அணிகளின் வீரர்கள் முழு விவரம்.. எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்.. நேரம் என்ன?

டர்பன்: ஐபிஎல் பாணியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA 20 தொடரின் 4வது சீசன் நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். வெள்ளிகிழமை இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் போட்டியில் எம்ஐ கேப் டவுன் மற்றும் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

சிஎஸ்கே அணி வாங்கி இருக்கும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது முதல் ஆட்டத்தை சனிக்கிழமை டிசம்பர் 27ஆம் தேதி பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. டிவால்ட் பிரெவிஸ், ப்ரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியால் R16.5 மில்லியன் (சுமார் இந்திய மதிப்பில் 8.3 கோடி ரூபாய்) என்ற எஸ்ஏ20 வரலாற்றிலேயே இதுவரை இல்லாத சாதன விலைக்கு ஏலம் போன வீரரானார்.

SA 20 2025

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, பிரிட்டோரியஸ் கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரின் முதல் 2 சீசனில் சன்ரைசர்ஸ் அணியும், தறபோது எம்ஐ கேப்டவுன் அணியும் கோப்பையை வென்றுள்ளது. இம்முறையாவது டுபிளசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொடரில் உள்ள 6 அணிகளின் வீரர்கள் பட்டியலை தற்போது காணலாம்.

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: பிராண்டன் கிங், ரிலீ ரோசௌ, ரிவால்டோ மூன்சாமி, நீல் டிம்மர்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேம்ஸ் வின்ஸ், டோனோவன் ஃபெரீரா, நாண்ட்ரே பர்கர், டேனியல் வோரல், இம்ரான் தாஹிர், பிரெனெலன் சுப்ராயன், ரீஸ் டோப்லி, ஜான்கோ ஸ்மிட், அகீல் ஹொசைன், ரிச்சர்ட் கிளீசன், வையான் மூல்டர், டயான் ஃபோரெஸ்டர், ஸ்டீவ் ஸ்டோல்க், ஷுபம் ரஞ்சனே.

டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஐடன் மார்க்ரம், டெவோன் கான்வே, மார்க்வெஸ் அக்கெர்மேன், டேவிட் பெடிங்ஹாம், டோனி டி சோர்சி, கைஸ்பெர்ட் வெகே, ஜோஸ் பட்லர், ஹெயின்ரிச் கிளாசன், க்வெனா மாபகா, ஜெரால்ட் கோட்ஸி, டாரின் டுபாவிலான், சுனில் நரைன், நூர் அஹமது, ஆண்டிலே சிம்லேனே, ஏதான் பாஷ், தயான் காலியம், டேவிட் வீஸ், தைஜுல் இஸ்லாம், எவான் ஜோன்ஸ்.

எம்ஐ கேப் டவுன்: ராஸ்ஸி வான் டெர் டுசென், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டாம் மூர்ஸ், டான் லெட்கான், ரயான் ரிகெல்டன், நிக்கோலஸ் பூரன், டிரிஸ்டன் லூஸ், தப்ரைஸ் ஷம்ஸி, டேனெ பீட், ரஷீத் கான், ட்ரென்ட் போல்ட், ககிசோ ரபாடா, ட்வைன் பிரிட்டோரியஸ், ஜேசன் ஸ்மித், கரீம் ஜனத், ஜாக் ஸ்னைமேன், டயான் வான் வூரென், ஜார்ஜ் லிண்டே, கார்பின் பாஷ்.

பார்ல் ராயல்ஸ்: கைல் வெர்ரெய்ன், கீகன் லயன்-கேட்செட், ஆசா ட்ரைப், டேவிட் மில்லர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரூபின் ஹெர்மன், நகபாயோம்சி பீட்டர், ஆட்னியல் பார்ட்மேன், குடகேஷ் மோடி, ன்கோபானி மோகோனா, ஹார்டஸ் வில்ஜோன், ஜேக்கப் ஜோஹன்னஸ் பாசென், இஷான் மாலிங்கா, முஜீப் உர் ரஹ்மான், பியோர்ன் ஃபார்ச்சூய்ன், டேனியல் லாரன்ஸ், டிலனோ பாட்கீட்டர், விஷன் ஹலம்பேஜ், சிகந்தர் ராசா.

ப்ரிட்டோரியா கேப்பிடல்ஸ்: டிவால்ட் பிரெவிஸ், கானர் எஸ்டர்ஹுய்ஸன், சிபோனலோ மகானியா, வில் ஸ்மீட், மீகா-ஈல் பிரின்ஸ், லுங்கி இங்கிடி, கேசவ் மகாராஜ், லிசாத் வில்லியம்ஸ், கோடி யூசுப், க்ரெய்க் ஓவர்டன், சாகிப் மஹ்மூத், கிடியன் பீட்டர்ஸ், ஜூனைத் தாவூத், பயாண்டா மஜோலா, ப்ரைஸ் பார்சன்ஸ், விஹான் லப், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், வில் ஜாக்ஸ், ஆண்ட்ரே ரசல்.

சன்பிலேயர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: குவின்டன் டி காக், மேத்யூ ப்ரீட்ஸ்கே, மிட்செல் வான் பூரன், ஜோர்டான் ஹெர்மன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜானி பேர்ஸ்டோ, என்ரிச் நார்ட்ஜே, லூத்தோ சிப்லமா, கிறிஸ் வுட், அல்லாஹ் கசான்ஃபார், ஆடம் மில்னே, செனுரன் முத்தூசாமி, பேட்ரிக் க்ரூகர், பையர்ஸ் ஸ்வானெபோயல், ஜேம்ஸ் கோல்ஸ், லூயிஸ் க்ரெகரி, சி.ஜே. கிங், ஜே.பி. கிங், மார்கோ ஜான்சென்.

Story first published: Thursday, December 25, 2025, 11:03 [IST]
Other articles published on Dec 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+