Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA 20 2025- பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 4 அணிகள் எது? CSK-வின் தம்பியை கடைசி நேரத்தில் காப்பாற்றிய MI

டர்பன் : ஐபிஎல் தொடர் பாணியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஸே 20 தொடரில் லீக் சுற்று தற்போது முடிவடைந்து இருக்கிறது. இதில் பிளே ஆப் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப் டவுன் அணி லீக் ஆட்டத்தில் பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் மட்டும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி போனஸ் புள்ளிகளுடன் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தால், ஜே எஸ் கே அணியை பின்னுக்கு தள்ளி அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்க முடியும். ஆனால் எம்ஐ கேப்டவுன் அணி, ஜேஎஸ்கேவை காப்பாற்றி இருக்கிறது.

mi cape town joburg super kings 20

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் அணியில் தொடக்க வீரர் செதிக்குல்லா ஆட்டல் 74 ரன்களும், காணர் 69 ரன்களும் எடுக்க நடு வரிசையில் டெலெனோ போட்டிகர் 26 ரன்களும் எடுக்க, எம் ஐ கேப் டவுன் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கில் களம் இறங்கிய பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணியில் ஜேம்ஸ் நேசம் மட்டும் 32 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்ங்களில் ஆட்டம் இழந்தனர்.

இதனால் அந்த அணி 106 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் எம்ஐ கேப்டவுன் அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றி இரண்டு, தோல்வி என 35 புள்ளிகள் உடன் எம்ஐ கேப்டவுன் அணி முதல் இடத்திலும், பார்க் ராயல்ஸ் 28 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 24 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 19 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருக்கிறது. இந்த நான்கு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள முதல் குவாலிபயர் ஆட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த எம் ஐ கேப்டவுன் அணியும், பார்ல் ராயல்ஸ் அணியும் பல பரீட்சை நடத்துகின்றன. இதை அடுத்து பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் அணியை ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொடுக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.

Story first published: Tuesday, February 4, 2025, 9:30 [IST]
Other articles published on Feb 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+