SA 20 தொடர்.. தடுமாறிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்.. இறுதியில் வாண வேடிக்கை.. யாருப்பா நீ ?
டர்பன் : தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் புதிய டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கிய ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் விளையாடினார்கள்.
இதனால் இந்த ஆட்டம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த தொடரில் உள்ள அனைத்து அணிகளையும் ஐபிஎல் அணி நிர்வாகமே வாங்கியுள்ளதால், இதனை ஒரு மினி ஐபிஎல் போல் ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்த அணிக்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் டுபிளஸிஸ் தான் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கினர்.

மோசமான தொடக்கம்
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜென்னிமான் மாலன் 5 ரன்களிலும், ரீகா ஹெண்ட்ரிக்ஸ் 1 ரன்னிலும், கெயில வெர்ரைன் 10 ரன்களிலும், லீவிஸ் கிர்காரி 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பவர்பிளே முடிவதற்குள் சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

டோனோவன் ஃபெரரியா
இதனையடுத்து 3வது இடத்தில் களமிறங்கிய டுபிளஸிஸ் பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். 33 பந்துகளில் 39 ரன்கள் சேர்ந்த நிலையில், அவருடன் களமிறங்கிய தென்னப்பிரிக்க வீரர் டோனோவன் ஃபெரரியா தான் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

ரொமரியோ செஃபார்ட்
சிக்சர், பவுண்டரி என டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் பந்துவீச்சை அவர் பறக்க விட்டார். 28 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், தன்னுடைய அதிரடியை அவர் மேலும் அதிகப்படுத்தினார். இதே போல் டோனோவன் ஃபெரரியாவுக்கு ஜோடியாக களமிறங்கிய ரொமரியோ செஃபார்ட் அதிரடியை காட்டினார்.

இமாலய இலக்கு
இதனால் 140 ரன்களுக்கு சுருண்டு இருக்க வேண்டிய பர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. இதில் 40 பந்துகளை எதிர்கெண்ட டோனோவன் ஃபெரரியா 82 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். ரொமரியோ செஃபார்ட் தன் பங்கிற்கு 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இந்த இரண்ட வீரர்களுமே ஐபிஎல் தொடரில் முறையே ராஜஸ்தான், ஐதரபாத் அணிக்காக விளையாடுவிது தாடன சோகமே.


Click it and Unblock the Notifications