Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA T20 - தென்னாப்பிரிக்காவில் மிரட்டலான அணியை உருவாக்கிய சூப்பர் கிங்ஸ்.. அதிரடி வீரர்கள் தேர்வு

ஜோகனஸ்பர்க்: ஐபிஎல் பாணியில் நடைபெறும் தென்னாப்பிரிக்க டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்குகிறது.

Recommended Video

IND vs AUS 208 ரன்களை Chase செய்தது பற்றி Aaron Finch கருத்து

இதில் பங்குபெறும் அணிகளை ஐபிஎல் அணிகளே வாங்கியதால் இதன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டலான அணியை உருவாக்கியது.

முன்னணி வீரர்கள்

முன்னணி வீரர்கள்

ஜோகனஸ்பர்க் அணியின் கேப்டனாக ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடிய டுபிளஸிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏலத்திற்கு முன்பே சூப்பர் கிங்ஸ் அணி, மொயின் அலி, மகிஷ் தீக்சனா, ரோமேரியோ செஃபர்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோயிட்சே ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. எனினும் மொயின் அலி இந்த தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதிரடி பேட்ஸ்மேன்

அதிரடி பேட்ஸ்மேன்

தென்னாப்பிரிக்காவின் அதிரடி இளம் வீரராக கருதப்படும் டோனோவன் ஃபெராரியாவை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி தூக்கியது. 19 டி20 போட்டியில் விளையாடி 384 ரன்களை ஃபெராரியா குவித்துள்ளார். அவருடைய சராசரி 54 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 148 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 47 லட்சம் ரூபாயை கொடுத்து ஏலத்தில் சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

இதே போன்று இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி புருக்கை 94 லட்சம் ரூபாயை கொடுத்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது. இதே போன்று தென்னாப்பிரிக்க வீரர் ஜேன்னிமான் மாலனை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தட்டி தூக்கியுள்ளது. இதே போன்று அதிரடி வீரர் ரீசா ஹெண்டரிக்சையும் சூப்பர் கிங்ஸ் 2 கோடியே 53 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. அல்சாரி ஜோசப்பை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்

ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்

டுபிளசிஸ், மகீஷ் தீக்சணா, ரோமரியோ ஷிப்பர்ட், ஜெரால்ட் கோயிட்சே, ஹாரி புருக், ஜென்னிமான் மாலன், ரீசா ஹெண்டரிக்ஸ், கையில் வெர்ரையின், ஜார்ஜ் கார்டன், அல்சாரி ஜோசப், லியூஸ் டுபிளாய், லீவிஸ் கிர்காரி, லிசாட் வில்லியம்ஸ், நாண்ட்ரே பர்கர், டோனோவன் ஃபெராரியா, மலூசி சிபாடோ, கேலப் செலிகா

Story first published: Tuesday, September 20, 2022, 17:51 [IST]
Other articles published on Sep 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+