For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5.4 ஓவரில் 98 ரன்கள் அடித்த சிஎஸ்கே தம்பி ஜேஎஸ்கே.. MI கேப்டவுன் அணி தோல்வி.. டுபிளசிஸ் அபாரம்

SA 20 : எஸ் ஏ டி 20 கிரிக்கெட் தொடரில் மிகவும் முக்கியமான ஆட்டமாக கருதப்பட்ட ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம் ஐ கேப் டவுன் அணிகள் இன்று பல பரிட்சை நடத்தின. சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளின் சொந்தமான இரு அணிகளும் நேற்று மோதியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

டாஸ் வென்ற ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் எட்டு ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதை அடுத்து எம் ஐ கேப்டவுன் அணியில் தொடக்க வீரர் ரெஸி வெண்டர்டூசன் 16 ரன்களும், ரியான் ரிக்கில்டன் 23 ரன்களும் எடுத்தனர்.

SA 20 - JSK Chases 98 runs with in 5.4 runs and win with a bonus point against MI Cape town

கேப்டன் பொலார்ட் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். இதில் நான்கு சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் எட்டு ஓவர் முடிவில் மும்பை அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த இலக்கை 6 ஓவருக்குள் எட்டினால் போனஸ் புள்ளி ஜே எஸ் கே அணிக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டுப்ளசிஸ் மற்றும் டுபிளாய் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இருவரும் EA கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் இல் வரும் கம்ப்யூட்டர் கேம் போல் பவுண்டரி சிக்ஸர்களாக அடிச்சு தள்ளினர்.

ரபாடா, நுவான் துஷாரா, சாம் கரன் என அனைவரின் பந்துகளையும் ஜே எஸ் கே அணி பொளந்து தள்ளியது. டுபிளாய் 14 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும் நான்கு இமாலய சிக்சர்களும் அடங்கும். இந்த தொடர் முழுவதும் சொதப்பிய கேப்டன் டுப்ளசிஸ் 20 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் ஐந்து பவுண்டர்களும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.இதன் மூலம் 5.4 ஓவர்கள் எல்லாம் ஜே எஸ் கே அணி வெற்றி இலக்கு எட்டி போனஸ் புள்ளிகளை பெற்றது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஜே எஸ் கே அணி தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. தற்போது எம்ஐ கேப்டன் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளது. அதில் இரண்டிலும் அந்த அணி வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். ஆனால் ஜே எஸ் கே அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது. ஜே எஸ் கே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சி இருக்கிறது. அதில் அவர்கள் ஒன்றில் வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 30, 2024, 11:06 [IST]
Other articles published on Jan 30, 2024
English summary
SA 20 - JSK Chases 98 runs with in 5.4 runs and win with a bonus point against MI Cape town 5.4 ஓவரில் 98 ரன்கள் அடித்த சிஎஸ்கே தம்பி ஜேஎஸ்கே.. MI கேப்டவுன் அணி தோல்வி.. டுபிளசிஸ் அபாரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+