Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே தம்பி டா! SA 20 எலிமினேட்டரில் ஜேஎஸ்கே அணி அபார வெற்றி..வெறித்தனமாக ஆடிய டுபிளசிஸ்

SA 20 JSK :எஸ் ஏ 20 தொடரில் பிளே ஆப் சுற்றில் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் ஜே எஸ் கே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

ஐபிஎல் பாணியில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஜோகனஸ்பர்க் அணியை மையமாக வைத்து சிஎஸ்கே ஒரு அணியை வாங்கியது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி என்ற இந்த அணியின் கேப்டனாக டுபிளசிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

JSK

இந்த தொடரில் ஜே எஸ் கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்தது. இதன் மூலம் இன்று எலிமினேட்டர் போட்டியில் ஜே எஸ் கே அணியும் ராயல்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற ஜே எஸ் கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஜே எஸ் கே அணியின் பந்துவீச்சை கொஞ்சம் கூட ராயல்ஸ் அணி வீரர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. குறிப்பாக ஷாம் குக் மற்றும் பர்கர் ஆகியோர் அபாரமாக பந்து வீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினர். ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 24 ரன்களிலும் ஜாஸ் பட்லர் 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 40 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்பரன்களில் வெளியேறினர். டேன் விலாஸ் மட்டும் 16 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இதனால் ராயல்ஸ் அணி18.5 ஓவர்கள் எல்லாம் 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாம் குக் நான்கு விக்கெட்டுகளையும் , பர்கர் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதை அடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜே எஸ் கே அணி விளையாடியது. வழக்கம் போல தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் டுப்ளசி மற்றும் டுபிளாய் ராயல்ஸ் அணி பந்துவீச்சை ஒரு கை பார்த்தனர். வீசிய பந்துகளை எல்லாம் சிக்ஸர், பவுண்டரி என இருவரும் பறக்க விட ஜே எஸ் கே அணியின் ஸ்கோர் கடகடவென உயர்ந்தது.

ஒரு கட்டத்தில் 4.3 ஓவர்கள் எல்லாம் ஜே எஸ் கே அணி 50 ரன்கள் கடந்தது அபாரமாக விளையாடிய டுபிளாய் 29 பந்துகளில் அரை சதம் கடக்க கேப்டன் டுப்ளிசிஸ் 32 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இதனால் ஜே எஸ் கே அணி 13.2 ஓவர்கள் எல்லாம் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
டுபிளாய் 43 பந்துகளில் 68 ரன்கள் எடுக்க டுப்ளசிஸ் 34 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த நிலையில் ஆட்டநாயகன் விருதை நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய சாம் குக் கைப்பற்றினார். இந்த நிலையில் குவாலிபையர் 2 போட்டியில் ஜேஎஸ்கே அணி இன்று வியாழக்கிழமை டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் அணியுடன் பல பரிட்சை நடத்துவார்கள்.

Story first published: Thursday, February 8, 2024, 0:59 [IST]
Other articles published on Feb 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+