Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திருந்தாத ஜென்மம்! கேப் டவுன் சென்றும் Fraud செய்த மும்பையின் பொலார்ட்.. கடுப்பான சிஎஸ்கே சிங்கம்

SA 20 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினால் எப்போதுமே பரப்பரப்புக்கும் விறுவிறுப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது ஐபிஎல் அணிகள் போட்ட குட்டி தற்போது தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா என பல்வேறு இடங்களில் நன்றாக வளர்ந்து வருகிறது.

இதில் SA 20 என்று ஐபிஎல் பாணியில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே வின் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியின் எம் ஐ கேப் டவுன் அணியும் நேற்று முக்கியமான ஆட்டம் ஒன்றில் பல பரிட்சை நடத்தியது.

SA 20 - MI Cape town captain Pollard tatics to delay the game created controversy

இந்த போட்டியில் இரு அணியினரும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது எம் ஐ கேப் டவுன் அணி எட்டு ஓவர் முடிவில் 80 ரன்கள் எடுத்திருந்தது. இதனை எடுத்து சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி இலக்கு 98 ரன்கள் ஆக மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

இதனால் சிஎஸ்கே வீரர்கள் அதிரடியாக விளையாடத் தொடங்கினார்கள். ஆட்டம் எட்டு ஓவராக குறைக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஐந்து ஓவராவது சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் பிடித்திருக்க வேண்டும் அப்போதுதான் டக்வொர்த் லூயிஸ் விதி அமலுக்கு வரும். மழை வேறு பெய்யத் தொடங்கியதால் டுபிளசிஸ், டிபிலாயும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட எம் ஐ கேப்டவுன் அணியின் பொலார்ட் தனக்கு கைவந்த வேலையை செய்ய தொடங்கினார். அதாவது பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டது, ஃபீல்டிங் செட் செய்ய நேரத்தை கடத்துவது போன்ற பல ஏமாற்று யுக்திகளை போல செய்யத் தொடங்கினார்.

இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த டுப்ளசிஸ் ரபாடா பந்து வீசும் போது பாதியிலே நின்று விட்டு மீண்டும் நடந்து சென்று மீண்டும் பந்து வீசினார். இதை பார்த்த டுபிளசிஸ் கடுப்பானார். ஏற்கனவே மழை பெய்ய தொடங்கிய நிலையில் 5 ஓவர்களை வீசி விடக்கூடாது என்பதற்காக எம்ஐ கேப்டவுன் அணி செய்த தந்திர வேலையை நடுவரிடம் புகாராக கூறினார். எம் ஐ கேப் டவுன் வீரர்கள் இதேபோன்று ஒரு ஓவரில் பொலார்ட் பந்து வீச தயாராக இருந்து திடீரென்று ஷாம் கரனை அழைத்து நீ பந்துவீசு என்று கூறி மீண்டும் பில்டிங்கை மாற்றி செட் செய்து விட்டு பொலார்ட் சென்றார்.

இதன் மூலம் நேரம் வீணானது. மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டத்தை நடுவர்கள் நிறுத்தி விட வேண்டும் என்பதற்காக பொலார்ட் இப்படி கேவலமான வேலைகளை செய்ததாக ரசிகர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வருகின்றனர். மேலும் பல சிஎஸ்கே ரசிகர்கள் மும்பை அணியின் இந்த ஏமாற்று வேலை தென்னாப்பிரிக்கா வரை தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து நடுவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனினும் எம் ஐ கேப்டன் செய்த ஏமாற்று வேலையை புரிந்து கொண்ட டுபிளசிஸ் அபாரமாக விளையாடி மழையால் போட்டி தடைபடுவதற்குள் ஆட்டத்தை 5.4 வது ஓவர்களிலே முடித்து விட்டார்.

Story first published: Tuesday, January 30, 2024, 14:24 [IST]
Other articles published on Jan 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+