Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA 20- பட்டையை கிளப்பிய குட்டி டிவில்லியர்ஸ்! 29 பந்துகளில் 57 ரன்கள் குவிப்பு.. MI ரன் குவிப்பு

SA 20 : தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ டி20 தொடர் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. ஐபிஎல் பாணியில் நடைபெறும் இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் இரண்டு முறை சாம்பியன் ஆன சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், எம் ஐ கேப் டவுன் அணியும் பலபரிட்சை நடத்தியது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய எம்.ஐ அணியில் ரீசா ஹென்றிக்ஸ் அவுட் ஆக டக் அவுட்டாக, வெண்டர் டூசன் 16 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

sa 20 mict vs sunrisers dewald brevis

இதனை அடுத்து கொனர் 22 ரன்களும், காலின் இங்க்ரம் 22 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.ஒரு கட்டத்தில் எம்ஐ அணி தடுமாறிய போது குட்டி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட டிவால்ட் பிர்விஸ் அபாரமாக விளையாடினார். சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை அவர் சுக்கு நூறாக உடைத்தார்.

இரண்டு பவுண்டரி ஆறு சிக்ஸர்கள் விளாசி அவர் 29 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். இறுதியில் போட்கீட்டர் 25 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 23 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் எம்ஐ கேப்டன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் எம் ஐ அணி 23 ரன்கள் விளாசியது. இதில் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சில் மார்க்கோ யான்சன் மற்றும் ரிச்சர்ட் கிலீசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

எஸ்ஏ20 தொடரில் பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வீரர்கள் பட்டியலில் டிவால்ட் பிரவீஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஹென்றிச் கிளாசன் 51 பவுண்டரி 54 சிக்ஸர் அடித்து முதலிடத்திலும், 32 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது இடத்திலும் மார்க்கோ யான்சர் 15 பவுண்டரிகள் 21 சிக்சர்கள் அடித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Thursday, January 9, 2025, 23:13 [IST]
Other articles published on Jan 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+