For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SA 20 Points Table- சிஎஸ்கே தம்பி ஜேஎஸ்கே தொடர்ந்து 2வது வெற்றி.. புள்ளி பட்டியலில் எந்த இடம்?

டர்பன் : தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ 20 லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நல்ல தொடக்கத்தை பெற்றிருக்கிறது. ஐபிஎல் பாணியில் நடைபெறும் இந்த தொடரில் எட்டாவது லீக் ஆட்டம் டர்பனில் நேற்று நடைபெற்றது.

இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. சிஎஸ்கே அணியின் பல முன்னாள் வீரர்களும் இன்னாள் வீரர்களும் இந்த அணியில் இடம்பெற்று இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

SA 20 SA 20 Points Table JSK vs Durban super Giants

இந்த நிலையில் டாஸ் வென்ற ஜே எஸ் கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய ஜே எஸ் கே அணியின் கேப்டன் டுப்ளசி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கான்வே மற்றும் லூயிஸ் டுப்ளாய் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்தது. இந்த சூழலில் நிதானமாக விளையாடி வந்த கான்வே 22 ரன்களில் வெளியேற டூப்லாய் 38 ரன்களில் ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜானி பாரிஸ்டோ 22 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் வொக்ஸ் பந்தில் வெளியேறினார்.

நடு வரிசையில் களமிறங்கிய விகான் லுபே 17 ரன்களிலும், டொனோவா 26 ரன்களும் எடுத்தனர். இறுதியில் டேவிட் வீஸி 3 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ஜே எஸ் கே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டர்பன் அணி வீரர்களும் தடுமாறினர்.

பிராண்டன் கிங் 17 ரன்களிலும், மேத்தீவ் 7 ரன்களிலும், வியான் முல்டர் ஒன்பது ரன்களிலும் வெளியேறினர். அந்த அணியின் அனுபவ வீரரான குயின்டக் டி காக் மட்டும் நிதானமாக விளையாடி ஒரு முனையில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். ஆனால் அவருக்கு மற்ற வீரர்கள் துணை நிற்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசன் 29 ரன்களிலும், வொக்ஸ் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். டி காக் 45 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார்.

இதில் ஐந்து பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் டர்மன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் 18 ஓவர் முடிவில் 141 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. இதன் மூலம் ஜே எஸ் கே அணி புள்ளி பட்டியலில் விளையாடி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் எம்ஐ கேப் டவுன் அணி இருக்கிறது. அவர்கள் 3 போட்டியில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என ஒன்பது புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் 7 புள்ளிகளுடன் பிரிட்டோரியா கேப்பிடல் அணியும், டர்பன் அணி 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும். ராயல்ஸ் அனி 4 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் அணி புள்ளிகள் எதுவும் இன்றி கடைசி இடத்திலும் உள்ளனர்.

Story first published: Wednesday, January 15, 2025, 7:07 [IST]
Other articles published on Jan 15, 2025
English summary
SA 20 Points Table - JSK Registered second Win after beating Durban super giants சிஎஸ்கே தம்பி ஜேஎஸ்கே தொடர்ந்து 2வது வெற்றி.. புள்ளி பட்டியலில் எந்த இடம்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+