கேப் டவுன் : எஸ் எ 20 எனப்படும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் அணி போனஸ் புள்ளிகளுடன் வெற்றியைப் பெற்று அசத்தியிருக்கிறது. கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய ஜே எஸ் கே அணியின் தொடக்க வீரர் கான்வே 31 பந்தில் 35 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடினார். எனினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் டுபிளசிஸ் எம்.ஐ. பந்துவீச்சை சிதறடித்தார்.

38 பந்துகளை எதிர்கொண்ட அவர் 61 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் அடங்கும். மூன்றாவது வீரராக விளையாடிய லியூஸ் டுபிளாய் ஐந்து ரன்களில் வெளியேற ஜானி பாரிஸ்டோ கடைசிவரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார்.
இதில் நான்கு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் அடங்கும்.
விகான், டொனோவன் பெரேரியா 11 பந்தில் 18 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஜே எஸ் கே அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எம்ஐ கேப் டவுன் அணி தொடக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடுவது தொடக்க வீரர் ராசி வெண்டர் டூசன் 24 பந்துகளில் 39 ரன்கள் சேர்க்க மற்றொரு தொடக்க வீரர்கள் 39 பந்துகளில் 89 ரன்களை குவித்தார்.
இதில் எட்டு பவுண்டரி, ஆறு சிக்ஸர் அடங்கும். இதனால் எம் ஐ கேப் டவுன் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. மறுமுனையில் ரீசா ஹென்றிக்ஸ் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 28 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 15 புள்ளி 5 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதில் ஜே எஸ் கே அணியின் பதிரானா மூன்று ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் எம்ஐ கேப்டவுன் அணி 14 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் பார்ல் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் 2வது இடத்திலும்,ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பிடோரியா கேபிட்டல் அணி 9 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் 6 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும், சன்ரைசஸ் ஈஸ்டர்ன் கேப் 5 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது.