Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA 20 சீசன் 4: 6 அணிகளின் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியானது.. பிரவீஸ், மார்க்கரம் ரிலீஸ்

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 அணி தொடரில் உள்ள 6 அணிகளும் தங்களது தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் ஸ்டார் வீரர்களான மார்க்ரம், குயின்டன் டி காக் மற்றும் இளம் சூப்பர் ஸ்டார் டிவால்ட் ப்ரேவிஸ் ஆகியோர் அவர்களது அணிகளால் விடுவிக்கப்பட்டனர்.

அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக, ஜூலை 18-ஆம் தேதி, அனைத்து அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்த பிறகு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.தக்கவைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர்களில் ஹென்ரிக் கிளாசன், டொனோவன் ஃபெரைரா, ஃபாஃப் டு பிளெசிஸ்.

SA 20 Players retained list

ரயான் ரிக்கெல்டன், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ககிசோ ரபாடா, லுவான்-ட்ரே ப்ரிடோரியஸ், டேவிட் மில்லர், ப்ஜோர்ன் ஃபார்டுயின், ரூபின் ஹெர்மன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அடங்குவர்.

மார்க்ரம் மற்றும் ப்ரேவிஸ் ஆகியோர் தாங்களாகவே ஏலத்திற்கு செல்ல விரும்பினார்களா அல்லது அவர்களது அணிகள் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் விடுவித்தனவா என்பது தெளிவாகவில்லை. இதன் மூலம் ஏலத்தில் லுங்கி என்ஜிடி, வியான் முல்டர், கேசவ் மஹாராஜ், க்வேனா மபாகா, அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் டப்ரைஸ் ஷம்ஸி ஆகியோருடன் ஏலத்தில் பங்கேற்பார்கள்.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 3 தென்னாப்பிரிக்க வீரர்களும் 3 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். 6 அணிகளால் முன்பதிவு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் மீதமுள்ள கையிருப்பு பணத்தை தற்போது பார்க்கலாம்.

டர்பன்ஸ் சூப்பர் ஜயன்ட்ஸ் - 29.5 மில்லியன் ராண்ட்
சுனில் நரைன், நூர் அகமது, ஜோஸ் பட்லர், ஹென்ரிக் கிளாசன் (வைல்டு கார்டு)

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - 21.5 மில்லியன் ராண்ட்
ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேம்ஸ் வின்ஸ், அகீல் ஹொசைன், ரிச்சர்ட் க்ளீசன், டொனோவன் ஃபெரைரா

எம்ஐ கேப் டவுன் - 11.5 மில்லியன் ராண்ட்
ரயான் ரிக்கெல்டன், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ரஷீத் கான், ட்ரென்ட் போல்ட், நிக்கோலஸ் பூரன், ககிசோ ரபாடா (வைல்டு கார்டு)

பார்ல் ராயல்ஸ் - 14.5 மில்லியன் ராண்ட்
லுவான்-ட்ரே ப்ரிடோரியஸ், டேவிட் மில்லர், ப்ஜோர்ன் ஃபார்டுயின், முஜீப் உர் ரஹ்மான், சிக்கந்தர் ராசா, ரூபின் ஹெர்மன் (வைல்டு கார்டு)

ப்ரிடோரியா கேபிடல்ஸ் - 32.5 மில்லியன் ராண்ட்
வில் ஜாக்ஸ், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஆண்ட்ரே ரஸ்ஸல் (வைல்டு கார்டு)

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - 21.5 மில்லியன் ராண்ட்
ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அல்லா கசன்ஃபர், ஆடம் மில்னே, ஜானி பேர்ஸ்டோ, மார்கோ ஜான்சன் (வைல்டு கார்டு)

Story first published: Wednesday, July 23, 2025, 18:53 [IST]
Other articles published on Jul 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+